வியாழன், 6 ஜூன், 2019

ஒரே உற்பத்தி சாத்திய வளையியில் இரண்டு அமைய செலவுகளின காட்டும் வினா.3ஐ கூட கேட்கலாம்.குழம்பக்கூடாது.

இதில் 3வது  வினாவை தெளிவாக விளங்கி வினாவிற்குரிய விடையினை பாருங்கள்

சிவப்பு எச்சரிக்கைகள் - 5 பல் தேர்வு வினாக்களுக்கானது GCE A/L



சிவப்பு எச்சரிக்கை 1
ஒருமை விடையா?    ...................பன்மை விடையா??
அதாவது ஒரு விடைக்கு கோடு போடுவதா அல்லது ஒன்றிற்கு ஏற்பட்டதற்கு கோடு போடுவதா என்பதனை கவனமாக வினாக்களின் தன்மை ,முடிவிடங்களை வைத்து மாணவர்கள் கிரகிக்க வேண்டும்.


இதில் அவர்கள் எதை எனக் கேட்டதனால்  ஒரு விடை ஆகையினால்,ஏதாவது ஒன்றிற்கு கோடிட்டிருந்தால் முழு

புதன், 5 ஜூன், 2019

1.9-உற்பத்தி சாத்திய வளையியும் பொருளியலின் அடிப்படை எண்ணக்கருக்களும்

அருமை


வெளிவாரி விளைவுகள்-நுகர்வோன் இறமை-சந்தை மறைகரம்

1-வேலையின்மை குறைவது /2-அமையச்செலவு பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு / 3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு

உங்களுக்கு அவர்களே ஒரு உற்பத்தி சாத்திய வளையினை தந்து, வேலையின்மை குறைவதாக ஒரு வினாவை தொடுத்து,பின்னர் ஒரு பொருளினோ அல்லது இரு பொருளினதுமோ உற்பத்தி இயளவு குறைவதாகவோ கூடுவதாகவோ கூறி உங்களின் கவனத்தை திசை திருப்பும் முறையினை பாருங்கள்
உங்களுக்கு தெரியும் உற்பத்தி சாத்திய வளையி நகர்வதற்கான இரு பிரதான காரணங்கள்.இதானால் பொருளாதார வழர்ச்சி ஏற்படும்.
1-வளங்களின் அளவு அதிகரித்தல்
2-வளங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல்


உற்பத்திச் சாத்திய எல்லை வலதுபுறம் / வெளிப்புறம்  நகர்வடைய பொறுப்பாகவுள்ள காரணிகள்/
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள்
1.     1-வளத்திரட்சி அதிகரித்தல்
a.     புதிய வளங்களின் பயன்பாடு/புதிய வளக்கண்டுபிடிப்பு
b.     புதிய முதலீட்டுப் பெருக்கம்
c.     சிறப்படைந்த தொழிற்படையின் குடிவருகை
d.     வெளிநாட்டு முதலீட்டு வருகை
e.     வெளிநாட்டு உதவி கிடைத்தல்
f.      கீழ்கட்டுமான விருத்திகள்/உட்கட்டுமான விருத்திகள்

2.   2-  வள விளைதிறன் அதிகரித்தல்
  1. ·         நவீன நுட்பங்களின் வருகை/தொழில் நுட்ப முன்னேற்றம்
  2. ·         முகாமைத்துவ மேம்பாடு
  3. ·         மனித மூலதன விருத்தி
  4. ·         தொழிற்படை சிறப்புத் தேர்ச்சியடைதல்
  5. ·         உலகமயமாதல் விரிவடைதல்

1.   நாடொன்றின் உற்பத்தி இயலளவை நலிவடையச் செய்யும் காரணிகள் /உற்பத்திச் சாத்திய வளையியை இடப்புறம் நகரச் செய்யும் காரணிகள்
2.     வளத்திரட்சி குறைதல் / வளங்கள் அழிவடைதல்.
a.     இயற்கை அனர்த்தங்களால் வளங்கள் அழிவடைதல்.
b.     போரினால் வளங்கள் அழிவடைதல்.
c.     பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல்/ வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படல்.
d.     வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல்.
e.     சிறப்படைந்த தொழிற்படையின் குடி அகல்வுகள்
f.      சனத்தொகை அழிவுகள்
3.     வளவிளைதிறன்  திறன் குறைதல்.
a.     தொழில்நுட்ப தொகுதி அழிதல்.
b.     முகாமைத்துவத்தின் பின்னடைவு
c.     தொழிலாளர் வினைத் திறன் பின்னடைதல்
d.     தொழிற்படையின் சிறப்புத் தேர்ச்சியில் பின்னடைவு




மேற்குறிப்பிட்ட இந்த இரு பிரதான காரணங்களாலும் சாத்திய வளையியே நகரும் அதாவது இடப்புறமோ அல்லது வலப்புறமோ நகரும்.

மிக மிக அவதானம்,
1-வேலையின்மை குறைவது என்பது அமையச்செலவு 
2-பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு என்பதும்
3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு 

இதனால் வளையி நகராது,வளையிக்கு உள்ளே ஏற்கனவே உள்ள புள்ளி மேல் நோக்கி நகரும்.

3 வினாவும் ஒன்றே.
இதிலேதாவது ஒரு வினாவினை தொடுத்து விட்டு,அடுத்த வினாவினை உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு தொடர்பாகவோ அல்லது சாதாரண வேலயின்மை அதிகரிப்பு தொடர்பாகவோ தொடுத்தால்.நீங்கள் குழம்புவீர்கள்,என்பது அவர்களுக்கு தெரியும்.

சில மாணவர்கள் வேலையின்மை குறைவு என்பதனை உள்நேக்கி மேலும் நகர்த்திவிடுவர்.அது அல்ல
மாறாக

விடையளிக்கும் நுட்பங்கள்-அமையச்செலவுகளும் உற்பத்தி சாத்திய வளையியும்-வினா விடை

உற்பத்தி சாத்திய எல்லை வரைபடத்தில் பின்வரும் நிலமைகளினை எவ்வாறு காட்டுவீர்கள்?


மாணவர்களுக்கு உற்பத்தி சாத்திய வளையியின் வரைவிலக்கணம் எப்படி விளங்கியிருக்கிறது என்பதனை அவர்கள் சோதனை செய்யவே இந்த வினா
அதாவது வளங்கள் முழுமையாகவும் ,திறமையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலமையினையே உற்பத்தி சாத்திய வளையியின் மேல் உள்ள ஒவ்வொரு புள்ளியும் காட்டும்.அவதானமாக இருங்கள்
மாணவர்களில் பலருக்கும் ஒரு பெரும் சந்தேகம் உண்டு
அதென்னப்பா நிறை தொழில் /நிறை தொழில் மட்டம்.??அது உற்பத்தி சாத்திய வளையியில் உள்ள ஒரு புள்ளி தானே ?/
அல்லது வழையிக்கு உள்ளேயும் அது அமையுமா??
 அற்றன்ஷன்...
வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் அது நிறை தொழில்,
ஆனால் முழுமையாக பயன்படுத்தப்பட்ட வளங்கள் திறமையாக பயன் படுத்தப்பட்டால் மட்டுமே அது நிறை தொழில் மட்டம்.

1-நிறை தொழில் பொருளாதாரத்தில் வளங்களின் திறமையான பயன்பாடு?
இது நிறை தொழில் மட்டம்


செவ்வாய், 4 ஜூன், 2019

அலகு 1 ,பொருளியலில் முக்கிய வினாக்களும் விடைகளும் - உத்திகளும் - பாகம்1

கவனக்கலைப்பானுக்குள் சிக்காமல் விடைகளை தெரிவு செய்ய மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

1-ஒருமை விடையா/ஒரு விடையா?
2-பன்மை விடையா/ பல விடையா?
கண்டுபிடிப்பது எப்படி??? உதாரணம்

ஒரு விடைக்குரிய சொற்களின் முடிவிடங்கள்

இயல்பு,எது, காரணி,சூழ்நிலை,யாது,சரியான கூற்று,தொடர்பு,என்ன...

ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் வருவதற்கான முடிவிடங்கள்
இயல்புகள்,யாவை,எவை,காரணிகள்,சூழ்நிலைகள்,கூற்றுக்கள்,தொடர்புகள்

மாணவர்கள் வினாவினை வாசிக்கும் போது உங்களது அடிப்படை தமிழ் அறிவினை வைத்து கிரகிக்க வேண்டும் உதாரணமாக ,எது? எவை? எனபனவற்றை சரியாக புரிய வேண்டும்.
எது என கேள்வி கேட்கப்பட்டால் 1 விடை மட்டுமே சரியாக அமையும்.அதில் குழம்பக்கூடாது.எவை எனக் கேட்க்கப்பட்டால் 1ற்கு மேற்பட்ட விடைகள் சரியானவையாக அமையும்.

பூச்சிய அமையசெலவுக்கான காரணிகள் எவை?
உண்மையில் 3 நிலமைகளில் இது நடைபெறும்.

1-மாற்றுப்பயன்பாடு அற்ற நிலையில்,அதாவது தெரிவு அற்ற நிலையில்,அதாவது ஒரு பொருள் மட்டும் இருக்கின்ற நிலமையில்.

2-வளங்களின் அருமை தன்மை அற்ற பொருட்கள் தொடர்பில்,அதாவது இலவசப்பொருட்களுக்கு

3-வேலையின்மை குறைகின்ற போது,அதாவது வேலையின்மை குறைகின்றா போது ,ஏற்கனவே இருந்த வேலயின்மையின் புள்ளியானதுகொஞ்சம் உயர்வான புள்ளிக்கு செல்லும் .எனவே இரு பக்கமும் இழப்புக்கள் இருக்காது அதாவது X;Y 2பொருட்களுக்கும்