சிவப்பு எச்சரிக்கை 1
ஒருமை விடையா? ...................பன்மை விடையா??
அதாவது ஒரு விடைக்கு கோடு போடுவதா அல்லது ஒன்றிற்கு ஏற்பட்டதற்கு கோடு போடுவதா என்பதனை கவனமாக வினாக்களின் தன்மை ,முடிவிடங்களை வைத்து மாணவர்கள் கிரகிக்க வேண்டும்.

இதில் அவர்கள் எதை எனக் கேட்டதனால் ஒரு விடை ஆகையினால்,ஏதாவது ஒன்றிற்கு கோடிட்டிருந்தால் முழு
புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.





சிவப்பு எச்சரிக்கை -2
காரியத்துக்குரிய காரணமாக வலியுறுத்தி கூறும்போது
ஒரு விடையினால் மாத்திரமே,அல்லது மட்டுமே,இதனால் தான்
இப்படி காரியத்துக்குரிய காரணமாக வலியுறுத்தி கூறும்போது,அவ் வலியுறுத்தலின் தன்மைகளை பார்க்க வேண்டும்,ஏனெனில் வேறு காரணங்களாலும் குறித்த வினாவிற்க்கான விடைகள் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகம்.
சாதரணமாக சொல்கிறேன்,
நிலம் நனைந்திருக்கிறது,
மழை பெய்தால் மட்டுமே அது நடக்கும்..இப்படி சொன்னால் யோசியுங்கள்,ஏன் யாரும் தண்ணீர் ஊற்றியிருக்கலாம் ,அப்படியும் நனையலாம் என.
சிறப்பான,பிரதாண,சிறப்பியல்பு போன்ற சொற்களில் கவனம் தேவை,ஏனெனில் பொதுவான விடைகள் இப்படியான வினாக்களுக்கு பொருந்தாது.



முயற்சியாண்மைக்கு ஆபத்து நட்டங்களை தாங்குதல் என்ற பண்பு உண்டு,ஆனால் உங்களை குழப்புவதற்க்காக உற்பத்தியை ஆபத்துகளை எதிர்நோக்கல் என போட்டிருக்கிறார்கள்.வினாவை பாருங்கள்,முயற்சியாண்மையின் தனித்துவமான தொழிற்பாட்டை,அதாவது மற்றைய உற்பத்திகாரணிகளில் இருந்து வேறுபடும் இயல்பு

உற்பத்தி புள்ளிக்கு குழிவு என்றால் அதிகரித்து செல்லும் அமையச்செலவு என்கிறா பதம் வர வேண்டும்
ஆனால் வடிவம் என்று மட்டும் கூறி குழிவு என்று சொன்னால் அது விஞ்ஞான குழிவு,அது உற்பத்தி புள்ளிக்கு குவிவாக அமையும் ,எனவே அங்கே குறைந்து செல்லும் அமைய செலவினை கருத வேண்டும்
சிவப்பு எச்சரிக்கை -3
வரைபடம் பற்றிய பல்தேர்வு வினா குழப்பங்களை தெளிவு படுத்தல்
இரண்டு பக்கங்கள் அதாவது கிடை அச்சு நிலைக்குத்தச்சு இருக்கும் வரைபுகளை பற்றி குறிப்பிடும் போது ,பொதுவாக எப்பக்கத்தை பற்றி வினாவுகிறார்கள் என்பதை கூர்மையாக அவதானிக்க வேண்டும்,இரு பக்கத்தையும் பற்றி சொன்னால் ,கவனக்கலைப்பான் விடையில் ஒருபக்கத்தை பற்றி சொல்லப்படும் விடைகளை தவிர்க்க வேண்டும்.சாதாரணமாக இரு பக்க நகர்வினையோ அல்லது ஒருபக்க நகவினையோ சொல்லும் போது இலக்கங்கள்,அல்லது வீதங்கள் உதாரணமாக 6% பொருளாதார வளர்ச்சி..உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு,
கோடு நகர்கிறதா?,எப்பக்கம் நகர்கிறது?,கோட்டுக்கு உள்ளே புள்ளிகள் நகர்கின்றனவா?அல்லது கோட்டிலுள்ள புள்ளிகளை பற்றி சொல்லப்படுகிறதா,கோட்டிற்கு வெளியே உள்ள புள்ளிகளை பற்ரியதா என தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.இது வினாவின் தன்மையை பொறுத்து அமையும்.




சிவப்பு எச்சரிக்கை 4
ஒவ்வொரு வினாவுக்குள்ளும் ஒரு தர்க்கம் உண்டு,அது வினாவின் பின் பக்கத்திலே வரலாம்/வரும் .மாணவர்கள் அதனை அவசரத்தில் வாசிக்காமல் கட்டாயமாக தெளிவாக வினாவின் பின் பக்கத்தை வாசிக்க வேண்டும் உதாரணமாக
- சரியானதை/சரியானவைகளை/
- சரியான கூற்றை /கூற்றுக்களை /
- மிக சரியான கூற்றுக்களை/கூற்றை /
- ஏற்றுக்கொள கூடியதனை/கூடியவைகளினை
இனங்காண்க?
- பிழையானதை/பிழையான வைகளை
- பிழையான கூற்றை/ கூற்றுக்களை /
- ஏற்றுக்கொள்ள முடியாததை/
- ஏற்றுக்கொள்ள முடியாதவைகளினை
இணங்காண்க?

அமையச்செலவு பூச்சியமாக அமையும் சந்தர்ப்பங்கள் எவை?



சிவப்பு எச்சரிக்கை 5
அவர்கள் வரைந்த வரைபில் ,உங்களை வரையும்படி அவர்கள் சொல்ல வேண்டியதில்லை.காட்டுங்கள் என சொல்வார்கள்
உதாரணமாக ஒரு பொருளில் 20 வீதம் வழர்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுங்கள் என்றால்,பயப்படாமல் அவர்களுடைய அடிப்படை வரைபில் 20% நகர்த்தி காட்ட வேண்டும்.அல்லது உள்ளேயான நகர்வு,புள்ளி நகர்வுகள் எனில் நகர்த்தி அம்புக்குறி இட்டு காட்டுங்கள்.இல்லை நான் தொட மாட்டேன் ..அவர்கள் கீறியதில் கை வைப்பது தப்பு என யோசிக்காதீர்கள்.
முதலில் அவர்களின் அடிப்படை வரைபின் தன்மையினை நீங்கள் ஏற்கனவே படித்த ,பாடசாலையிலோ ரியூசனிலோ படித்த ஞாபகத்தை வைத்து மீட்டி பாருங்கள்.அது என்ன வரைபு,பின்னர் கேள்வியை தெளிவாக விளங்குங்கள்.அதன் பின் செய்ய வேண்டியதை செய்யுங்கள்
இப்போதைக்கு இது போதும்..இன்னும் போக போக சிவப்பு எச்சரிக்கைகள் தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக