2.1 -1 கேள்விக்கோட்பாடு மற்றும் கேள்வி விதியினை வரைவிலக்கணப் படுத்தல்
கேள்விக் கோட்பாடு
பயன் பாடுடையதும் பற்றாக்குறையானதுமான பொருட்களுக்கு நுகர்வோரிடம் கொள்வனவு ஆற்றல் உள்ளபோதே கேள்வி ஏற்பட முடியும், பொருட்களின் மீது விருப்பங்கள் உள்ள போதும் கொள்வனவு ஆற்றல் இல்லாமல் நுகர்வோரால் கேள்வி ஏற்படுத்த முடியாது. எனவே கேள்வி என்பது
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் ஒரு பொருளுக்கு இருக்கக்கூடிய பல் வேறு விலை களில் நுகர்வோரால் கொள்வனவு செய்ய தயாராக உள்ள பல்வேறு பட்ட தொகைகளாகும்.
கேள்விசார்பான மேலுள்ள வரைவிலக்கணத்தில் இருந்து மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.)
01. பொருளாதாரப் பொருட்களுக்கு மாத்திரமே கேள்வி எழுப்பப்படும். அதாவது அருமை, பயன்பாடு கொண்ட பொருட்களுக்கே கேள்வி ஏற்படும். எனவே இலவச பொருட்களுக்கு கேள்வி ஏற்பட முடியாது.
02, பொருளாதாரப் பண்டங்களின் உற்பத்திச்செல்வின் காரணமாக விலை உடைய பொருட்கள் மீதே கேள்வி ஏற்பட முடியும்.
03. வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்வனவு சக்தி இருப்பவர்களால் மட்டுமே பொருட்கள் மீது கேள்வி ஏற்படுத்த முடியும்.
எனவே அருமை, பயன், விலை, வருமானம் போன்ற அனைத்தும் ஒரேநேரத் தில் கொடுக்கப் படின் மாத்திரமே ஒரு பொருளுக்கான கேள்வியை வரையறை செய்யலாம்.
கேள்விக்கோட்பாடு என்பது ஒரு
கோட்பாட்டு ரீதியான எண்ணக்கரு ஆகும் ,இது விலைக்கும் நுகர்வோரினால் எழுப்பப்படும் பொடுட்கள்
செவைகளின் கேள்விக்குமான தொடைபை விளக்குவதாகும்.கேள்விக்கோட்பாடனது கேள்விக்கோட்டிற்க்கு
அடிப்படையானதாகும் ,மற்றும் இது நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் இயலளவை
காட்டுகின்றது.
ஆ- •கேள்வியை
வரவிலக்கணப்படுத்தல்
•பயன்
பாடுடையதும் பற்றாக்குறையானதுமான பொருட்களுக்கு நுகர்வோரிடம் கொள்வனவு ஆற்றல்
உள்ளபோதே கேள்வி ஏற்பட முடியும், பொருட்களின் மீது விருப்பங்கள் உள்ள போதும்
கொள்வனவு ஆற்றல் இல்லாமல் நுகர்வோரால் கேள்வி ஏற்படுத்த முடியாது. எனவே கேள்வி
என்பது
”குறித்த காலத்தில் குறித்த சந்தையில் ஒரு
பொருளுக்கு இருக்கக்கூடிய பல் வேறு விலை களில் நுகர்வோரால் கொள்வனவு செய்ய தயாராக
உள்ள பல்வேறு பட்ட தொகைகளாகும்.”
•
•கேள்விசார்பான
மேலுள்ள வரைவிலக்கணத்தில் இருந்து மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.)
•01. பொருளாதாரப் பொருட்களுக்கு மாத்திரமே கேள்வி எழுப்பப்படும்.
அதாவது அருமை, பயன்பாடு கொண்ட பொருட்களுக்கே கேள்வி ஏற்படும். எனவே இலவச
பொருட்களுக்கு கேள்வி ஏற்பட முடியாது.
•02, பொருளாதாரப் பண்டங்களின் உற்பத்திச்செல்வின் காரணமாக விலை
உடைய பொருட்கள் மீதே கேள்வி ஏற்பட முடியும்.
•03. வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்வனவு சக்தி
இருப்பவர்களால் மட்டுமே பொருட்கள் மீது கேள்வி ஏற்படுத்த முடியும்.
•எனவே அருமை, பயன்,
விலை, வருமானம் போன்ற அனைத்தும் ஒரேநேரத் தில் கொடுக்கப் படின் மாத்திரமே ஒரு
பொருளுக்கான கேள்வியை வரையறை செய்யலாம்
1.1-2 தனி நபர் கேள்வியும் சந்தைக் கேள்வியும்
அ-வரைவிலக்கணம் தனிநபர் கேள்வி
தனி நபர் கேள்வி
அட்டவணை
தனி நபர் கேள்வி
அட்டவணை என்பது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏனயவை மாறாத நிலையில் குறிப்பிட்ட சந்தை
ஒன்றில் தனிப்பட்ட நுகர்வோன் ஒருவனால் குறித்த விலைகளில் கொள்வனவு செய்ய தயாராகவுள்ள பல்வேறுபட்ட கேள்வித் தொகைகளினை குறிக்கும்.
விலை
|
கேள்வி நபர் A
|
கேள்வி நபர் B
|
கேள்வி நபர் C
|
10
|
100
|
120
|
200
|
15
|
50
|
60
|
100
|
20
|
25
|
30
|
50
|
தனி நபர் கேள்வி அட்டவணையினை கொண்டு தனி
நபர் கேள்வி வளையியினை வரைய முடியும்
தனிநபர் கேள்விக்கோடு
குறிப்பிட்ட
காலப்பகுதியில் ஏனயவை மாறாத நிலையில் குறிப்பிட்ட சந்தை ஒன்றில் தனிப்பட்ட நுகர்வோரால்
கொள்வனவு செய்ய தயாராகவுள்ள கேள்வித் தொகைகளின் சேர்க்கை புள்ளிகளினை இணைத்து வரையப்படும்
கோடு ஆகும்.
தனியார் கேள்வி வளையியின் பண்புகள்
1.
இடமிருந்து வலமாக மேலிருந்து கீழாக சரிந்து செல்லும்
2.
குறித்த பொருளின் விலை மற்றும் கேள்வி தொகை என்பனவற்றிற்கிடையிலான தலை கீழ் தொடர்பை
காட்டும்
3.
ஏனையவை மாறாத நிலையில்,விலை குறையும்போது கேள்வி தொகை அதிகரிக்கும் மாறாக விலை
அதிகரிக்கும்போது கேள்வித்தொகை குறைவடையும்.
குறித்த
காலத்தில் குறித்த சந்தையில்ஏனையவை மாறாத நிலையில்
குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய
பல்வேறுபட்ட விலைகளில் சந்தையிலுள்ள அனைத்துக் கொள்வனவாளர்களாலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற
பல்வேறுபட்ட தொகைகளின் கூட்டுத்தொகை சந்தைக் கேள்வி எனப்படும்.
அதாவது தனிநபர் கேள்வியின்
மொத்தக் கூட்டே சந்தைக்கேள்வியாகும்,
|
சந்த்தைக்கேள்வியினை நிர்ணயிக்கும் காரணிகள்
கேள்விச்சார்பு
கேள்வியினை நிர்ணயிக்கும் அனைத்து காரணிகளினையும் ஒரு சமன்பாட்டு வடிவில் தொழிற்பாட்டு ரீதியாக அமைத்து எழுதுவது கேள்வி சார்பு ஆகும் .
தனி நபர் கேள்வி சார்பு
சந்தை கேள்வி சார்பு என 2 வகைப்படும்
தனிநபர் கேள்வி சார்பு
QDx= F( Px, P1..Pn-1, Y,T,G,EX,N)
QDx- குறித்த பொருளின் கேள்வி
F- தொழிற்பாடு
p1..pn-1 - ஏணைய தொடர்புடைய பொருட்களின் விலை அதாவது
1 -S பிரதியீட்டு பொருளின் விலை
2 -C நிரப்பு பொருளின் விலை
Y - வருமானம்
G- அரச தலையீடு
T - சுவை
P- சனத்தொகை
Ex- எதிர்பார்க்கை
N- நுகர்வோன் தொகையும் அதன் கட்டமைப்பும்
கேள்வித்தொழிற்ப்பாடும் கேள்வி விதியும்
உதாரணாமாக
விலை ஒரு தொழிற்பாடாக கூறுவதானால்
QD= f(P) இவ்வாறே அனைத்து காரணிகளினையும் ,தனித்தனியாக பிரித்து எனையவை மாறவில்லை என்றா எடுகோளினை அடிப்படையாக வைத்து ,அவ்வவற்றின் தாக்கங்கள் எவ்வாறு கேள்வியை தீர்மானிக்கின்றன என விளக்கப்படுவது தொழிற்பாடு ஆகும்.அதாவது எல்லா காரணிகளினையும் மொத்தமாக ஒரு சமன்பாட்டு வடிவில் அமைத்து கூறுவது கேள்வி சார்பாகவும் ,ஒரு காரணியை மட்டும் எடுத்து தொழிற்ப்பாட்டு வடிவில் கூறி ஏனையவை மாறவில்லை என எடுகோளுடன் விளாக்குவது கேள்வி தொழிற்பாடு ஆகும்
கேள்வி கோடு
கேள்வி அட்டவணை
கேள்வி சமன்பாடு
நேர் கோட்டு வடிவ கேள்விக்கோட்டின் சமன்பாடானது இவ்வாறு அமையும்
Qd = a – b(P)
- Q = கேள்வி அளவு
- a = பூச்சிய விலையில் கேள்வி தொகை
- b = கேள்விக்கொட்டின் சரிவு அதாவது கேள்வி தொகை மாற்றவீதாசாரத்தினை விலை மாற்ற விகிதாசாரத்தினால் பிரிக்க வருவது
- P = பொருளின் விலை Price of the good.
கேள்வி சார்பு என்பது விலையின் ஒரு தொழிற்பாடாகும்
QD= f(P)
மொத்த கேள்வி சமன்பாடு என்பது தனிப்பட்ட கேள்வி சமன்பாடுகளின் மொத்தமாகும் அதாவது இங்கு QD என்பது மொத்த கேள்வி சமன்பாட்டை குறிக்கும்,QDa+QDb+QDc என்பன தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்குமான கேள்விகளாகும்.
QD=QDa+QDb+QDc...QDn
Qa=10–2p
+
Qb=15–6p
+
Qc=18–9p
----------------------
Q / Qd=43-17p
--------------------
சந்தை கேள்வி சமன்பாடு = 43–17p
கேள்வி என்பதனை Q என்றோ Qd என்றோ குறிப்பிடலாம் ,குழம்பவேண்டியதில்லை
2.1.4 கேள்வி விதிகான காரணங்கள்
கேள்வி விதிக்கு முரணான சந்தர்ப்பங்கள் எவை?
கேள்வி மாற்றமும் கேள்வித்தொகை மாற்றமும்-கேள்வி நீட்டம் கேள்வி ஒடுக்கமும் ..கேள்வி அதிகரிப்பு கேள்வி குறைதலும்

2.1.5 விலை விளைவு-வருமான விளைவு-பிரதியீட்டு விளைவு
கிபன் பண்டங்கள் என்றால் என்ன
2.1.6 கேள்வி விதிக்கு எதிரான/முரணான சந்தர்ப்பங்கள் எவை?
1-காட்சிப்படுத்தக்கூடிய பண்டங்கள்/ஹன்பீசியஸ் பொருட்கள்
இவை முதல்தர வருமானம் பெறும் மக்களால் கொள்வனவு செய்யப்படுபவை ஆகும்.மிக ஆடம்பரத்தன்மை வாய்ந்தவை உதாரணமாக டயமொண்ட்,பி.எம்.டபிள்யூ கார்.அதாவது இவற்றின் விலை அதிகரிக்கின் ,அம் மக்கள் அதனை கௌரவமாக கருதி மேலும் வாங்குவர்.
2- கிஃபன் பண்டங்கள்
விலைக்கும் கேள்வி தொகைக்கும் நேர் தொடர்பு இருக்கின்ற அதேவேளை ,வருமானத்துக்கும் கேள்விக்கும் இடையே எதிர் தொடர்பு காணப்படும்.
அதாவது
அ -குறைந்த தரமுடைய ,குறைந்த விலையுஐய,குறைந்த வருமானமுடைய மக்களாள் பெருமளவு கொள்வனவு செய்யப்படும் பொருட்களாகும்
ஆ -பிரதியீட்டுத்தன்மை மிக குறைந்த அல்லது அற்ற பொருட்களாகும்..
,உதாரணமாக 1800 ஆம ஆண்டளவில் ஐரிசில் வாழ்ந்த வறுமைக்குடிகள் ஒரு வகையான உருளைக்கிழங்கினை உண்டார்கள் ,அப்போது அதன் விலை அதிகரித்தது,இருப்பினும் மக்கள் வேறு மாற்று வழியில்லாத நிலையில் அதன் கேள்வியினை அதிகரித்துக்கொண்டார்கள்.
3- எதிர்காலத்தில் விலை உயரலாம் என்ற எதிர்பார்ப்பு
இது விலை உயர இன்னும் கேள்வியினை அதிகரிக்கும்,
உதாரணம் போராட்ட காலங்களில் பெற்றோலின் விலை
4-மிக அத்தியாவ பொருட்கள்
உப்பு,உள் ஆடை,ஆடை போன்றன விலை அதிகரித்தாலோ கிஉறைந்தாலோ கேள்வி மாறாது.
5- ஏனைய பொருட்களின் விலை,தொடர்புடைய பொருட்களின் விலை
உதரணாமாக வருமானம் அதிகரிப்பு,
கேள்விக்கோடு மேலிருந்து கீழாக சரிந்து செல்வதற்கு காரணங்கள் யாவை?
1- குறைந்து செல்லும் எல்லைப்பயன் விதி
2- வருமான விளைவு
3- பிரதியீட்டு விளைவு
4- புதிய நுகர்வோரின் வருகை/அளவு -அதாவது விலை குறையின் இது இடம்பெறும்
5- ஒரு பொருளினதே சேவையினதே பல்வகை பயன்படுதன்மை,
உதாரணம் மின்சாரம்