வியாழன், 30 மே, 2019

1.3.1 .உற்பத்திக்காரணிகள்

நிலம் 
  1. •             இயற்கையின் வளம்.
  2. •             அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
  3. •             நிரம்பல் நெகிழ்வற்றது.
  4. •             வினைதிறனை உயர்த்தலாம்.
  5. •             நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலைவாடகையாகும்.

( – ம்) : காற்றுசூரிய ஒளி
உழைப்பு –
  1.              உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
  2.              அசையும் தன்மையுடையது.
  3.              ஓரினத் தன்மையற்றது.
  4.              கல்விபயிற்சிஅனுபவம் போன்றவற்றில் உழைப்பின்                                     விளைதிறனை உயர்த்தலாம்.
  5.              உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
  6.              உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.

( – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனைமுகாமையாளர் சேவை.
மூலதனம் (முதல்) –
  1.              மனிதனால் உருவாக்கப்பட்ட வளம்.
  2.              விளைதிறன் பெருக்கமுடையது. (உற்பத்தியை பெருக்கவல்லது)
  3.              தேய்வடையக்கூடிய சாதனம்.
  4.              உற்பத்தியில் மீண்டும் பயன்படுவது.
  5.              மூலதனத்துக்கான காரணிக் கொடுப்பனவு வட்டி ஆகும்.

( – ம்) : கட்டிடம்பொறித் தொகுதிகள்உபகரணம்.
மூலதனத்தின் வகைகள்
  1.              நிலையான மூலதனம்
  2.              சுழலும் மூலதனம்
  3.              பொருளாதார பொதுப்பணி மூலதனம்
  4.              சமூக பொதுப்பணி மூலதனம்
  5.              மனித மூலதனம்
  6.              இயற்கை மூலதனம்
  7.              சமூக மூலதனம்

நிலையான மூலதனம்
ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட நீண்டகால பயன்பாட்டினை உடையதும்உற்பத்தியில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடியதும் பயன்பாட்டின் போது பெறுமானத்தேய்வு அடையக்கூடியதுமான மூலதனப் பொருட்கள் நிலையான மூலதனம் ஆகும்.
( – ம்) : காணிக்கட்டடம்இயந்திரம்
சுழலும் மூலதனம்
ஒரு வருட காலத்திற்கு குறைந்த குறுங்கால பயன்பாடு உடையதும் உற்பத்தியில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடியதும் பெறுமானத் தேய்வுக்கு உட்படாததுமான மூலதனப் பொருட்களே இவை ஆகும்.
அதாவது உற்பத்தி நிறுவனம் ஒன்றில் காணப்படும் குறுங்காலத்தில் மாற்றமடையும் சொத்துக்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மூலதனம் ஆகும்.
இதுவே தொழிற்படு மூலதனம் என அழைக்கப்படுகிறது.
( – ம்) :
             மூலப் பொருள் இருப்புக்கள்
             அரைகுறை முடிவுப்பொருள் இருப்புக்கள்
             முடிவுப்பொருள் இருப்புக்கள்
பொருளாதாரப் பொதுப்பணி மூலதனம்
நாடொன்றின் பொருட்கள் சேவைகளில் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகளான பொருளாதார வன்கட்டுமானங்களையும்பொருளாதார மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் பொருளாதார பொதுப்பணி மூலதனம் ஆகும்.
( – ம்) :
1.            துறைமுகம்விமானத்தளம் (பொருளாதார வன்கட்டுமானம்)
2.            தொழில்நுட்ப நிறுவனம் (பொருளாதார மென்கட்டுமானம்)
சமூக பொதுப்பணி மூலதனம்
சமூக நலன்களையும்சமூக நீதிகளையும் பேணுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளான சமூக வன்கட்டுமானங்களையும்சமூக மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் ஆகும்.
( – ம்) :
1.            பாடசாலைமருத்துவமனை (சமூக வன்கட்டுமானம்)
2.            காவல் நிலையம்நீதிமன்றம் (சமூக மென்கட்டுமானம்)
இயற்கை மூலதனம்
இயற்கை வளங்களை பொருட்கள்சேவைகளினது உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவாறு மூலதனச் சொத்துக்களாக மாற்றி அமைக்கின்ற போது இயற்கை மூலதனம் எனப்படும்.
( – ம்) : வயல் நிலம்தேயிலைத் தோட்டம்.
சமூக மூலதனம்
சமூகத்தின் நன்மை கருதி மக்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுக்கள் / அமைப்புக்கள் இது ஆகும்.

.
மனித மூலதனம்
நாடொன்றின் தொழிற்படைக்கு கல்விபயிற்சிஅனுபவம்சுகாதாரம் வழங்கிவரும் போது அத் தொழிற்படைக்கு ஏற்படுகின்ற சமூக ஆளுமை விருத்திதனிப்பட்ட அறிவுதிறன் என்பவையே மனித மூலதனம் ஆகும்.
  1.              மனித மூலதனம் தொட்டுணர முடியாதுஉளரீதியானது  ஆனால் மூலதனம் நிலையானதுதொட்டுணரக் கூடியது.
  2.              மனித மூலதனம் உழைப்புமூலதனம் என்பவற்றின் பண்புகளை கொண்டிருக்கும்.
  3.              மனித மூலதனம் விருத்தியடையும்மூலதனம் பெறுமானத்தேய்வடையும்.
  4.              மனித மூலதன முதலீடானது தனிப்பட்ட நபரின் திறனுடன் இணைக்கப்பட்டது.

முயற்சி –
        தொழிற்பாடுகள்
  1. •             கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளல். (எதனைஎந்தளவில்எவ்வாறுயாருக்காக உற்பத்தி செய்தல்)
  2. •             உற்பத்தி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்செயற்படுத்தல்.
  3. •             புத்துருவாக்கம் செய்துஇடர்களை தாங்கல்.
  4. •             இதற்கு வெகுமதியாக இலாபம் வழங்கப்படும்.

பண்புகள்
  1.              மனித வளமாக இருத்தல்.
  2.              தலைமைத்துவம்தன்னம்பிக்கை காணப்படல்.
  3.              தூரநோக்கு இருத்தல்.
  4.              பயிற்சி வழங்கும் ஆற்றலிருத்தல்.
  5.              ( – ம்) : ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக