வியாழன், 30 மே, 2019

1.2.1.மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு

தேவைகள் (NEEDS) 

மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
இது வரையறுக்கப்பட்டது.
எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
இது வரையறுக்கப்படாதது.
நபருக்கு நபர் வேறுபடும்.
சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் –  பொருளாதாரம் அல்லாத் தேவைகள்   
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக