புதன், 5 ஜூன், 2019

விடையளிக்கும் நுட்பங்கள்-அமையச்செலவுகளும் உற்பத்தி சாத்திய வளையியும்-வினா விடை




உற்பத்தி சாத்திய வழையியின் சாய்வினை அமைய
செலவுகளே தீர்மானிக்கின்றான



அதிகரித்து செல்லும் அமைய செலவு என்றால் என்ன ?
சிலருக்கு பரீட்சையில் மட்டும்  ஒரு சந்தேகம் உடனடியாக வரும்.
குழிவு என்றவுடன் விஞ்ஞானிகள் போல யோசித்துவிடுவார்கள்.குழிவாடியை பற்றி.அது அல்ல.இங்கே

உற்பத்திக்கு குழிவு/உற்பத்தி புள்ளிக்கு குழிவு என்பது பிள்ளைபெற தயார் நிலைக்கு வந்த தாயாரின் வயிற்றை போல இருப்பது.

ஆனால் வடிவம் குழிவு என்பது உங்களின் விஞ்ஞான குழிவே.மிக மிக கவனம்,அவர்கள் வடிவம் என்கிறார்களா அல்லது உற்பத்தி புள்ளிக்கு குழிவு என்கிறார்களா என்பதை கவனாமாக வாசியுங்கள்.கோட்டை விட வேண்டாம்.வடிவம் குழிவு என்றால் அது குறைந்து செல்லும் அமைய செலவு.வடிவம் குழிவு தொடர்பாக கேட்க்கப்பட்ட வினா 2003 ஆம் ஆண்டு-
வினா

விடை


மற்றது  அமைய செலவை காண நினைக்கும் போது வரும் சந்தேகம்

Y யின் மாற்றம் மேலயா அல்லது X இன் மாற்றம் மேலயா என.
மிக அவதானம் புதினம் கீழே தான் இருக்கிறது,அதாவது நீங்கள் எதற்கான அமைய செலவை காண விரும்புகிறீர்களோ,அது கீலே இடப்பட வேண்டும்.ஆனால் சாதாரணமாக X பொருளுக்கான Y இன் அமைய செலவே கேட்க்கப்படுகிறது.ஆகவே இழப்பு மேலே எப்போதுமே மேலே தான் வரும்.அதாவது யY மேலே வரும்.

இங்கே வரைவிலக்கணம் எழுதும்போது பொருட்கள் சேவைகள் என எழுத பழகுங்கள்.நான் வரைபில் இரு பொருட்களினை போட்டதனால் இரு பொருட்கள் என எழுதி விட்டேன் ஏனெனில் ஒரு பொருளாதாரத்தில் சேவைகளும் நுகரப்படலாம் .அமைய செலவு நுகர்வின் போதோ,உற்பத்தியின் போதோஏற்படலாம் ஆகவே நுகர்வு,உற்பத்தி நடவடிக்கையின்போது என எழுதுங்கள்  .ஆகவே இப்படி எழுதுங்கள்.

"ஒரு பொருளாதாரத்தில் குறிப்பிட்ட இரு பொருட்களை அல்லது சேவைகளின,   உற்பத்தி செய்கிற /நுகர்கிற போது ஒரு பொருளினது அல்லது சேவையினது அலகினை 1 அலகால் அதிகரிக்கின்ற போது மற்றைய பொருளினது அல்லது சேவையினது இழக்கப்படும் அலகுகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதே அதிகரித்து செல்லும் அமைய செலவாகும்."
இது மிக சரியானதாகும்.
.











இங்கே 2 வினாக்கள் உண்டு.சிலர் 1 வினாவை மட்டு ம் கவனித்து ,கவனக்கலைப்பானுக்குள் சிக்கி விடுவர்.மிக மிக அவதானம்,வாசிப்பின் போது,1 புள்ளி போதும் பல்கலைக்கழக வாய்ப்பினை இழக்க....
அவதானம்,அமைய செலவு ஏற்பட காரணம் மாற்று உபயோகம்.இங்கே உற்பத்தி புள்ளிக்கு குழிவான என 
கேட்கப்படுகின்றது,
குழிவான தென்றவுடன் உள்புறவழைவு தான் ஞாபகம் வரும்.மிக அவதானம்.குழிவு என்பது விஞ்ஞான விதிப்படி சரி.ஏனெனில்  குழிவு ஆடி பற்றி படித்தமை ஞாபகம் வந்து குழப்பும்.

கவனம்..
ஆனால் பொருளியலில் சொல்லப்படும் குழிவு என்பது,உற்பத்தி புள்ளிக்கு குழிவான என்பது.இது வண்டியன் ஞானத்தின் வைதேகியின் வயிற்றை போல இருக்கும்.வீங்கி இருக்கும்.இது தான் குழிவு.அவதானம்.
 இனி வினாவை விளங்குங்கள்,இங்கே 2 வினாக்கள் உண்டு .கவனாமாக படியுங்கள்
நாம் ஏற்கனவே மேலே கொடுத்த அதிகரித்து செல்லும் அமைய செலவுக்குரிய வளையி இது.ஆனால் வினா அமையச்செலவு என கேட்க்கபடவில்லை,அமையச்செலவுகள் எவ்வாறு காட்டப்படலாம்??அவதானம்..ஆகவே விடையில் அவர்கள் உற்பத்திக்கு குழிவான அமைய செலவினை விட வேறு ஏதோ ஒன்றினை எதிர்பார்க்கிறார்கள்.இங்கே தான் உங்களின் புலமை வெளிப்படப் போகிறது .
என்னை பொறுத்தவரை சாதாரண மாணாவர்கள் உடனடியாகவே உற்பத்திக்கு குழிவான ஒரு வழையியினை வரைந்து ..சில இலக்கங்களையுமிட்டு விளக்கி விடுவீர்கள்.
அதனை செய்யாதீர்கள்..வினாவின் உள்ளடக்கத்தில் நீங்கள் நினைத்ததும் உண்டு,ஆனால் மாற்றுபயோகம் எவ்வாறு அமைய செலவினை ஏற்படுத்துகின்றது என்பது தான் இவ்வினா,


ஆமாம் அடுத்து மாற்றுப்பயன்பாடு அமைய செலவுக்கு கரணம் என்பதனை அழுத்தமாக எழுதுங்கள்.இங்கே உற்பத்தி வளங்களின் இயல்பு/  தன்மை மாற்றுபயோகம் என குறிப்பிடல் வேண்டும்.

இனி உங்களுக்கு விரும்பிய உதாரணத்தை எழுதுங்கள்,அதிக நேரம் செலவிடுவதை குறைக்க பாருங்கள்.தெரிந்த அனைத்தையும் வினாவின் தன்மைக்கேற்ப ஒழுங்காக எழுதுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக