மாணவர்களுக்கு உற்பத்தி சாத்திய வளையியின் வரைவிலக்கணம் எப்படி விளங்கியிருக்கிறது என்பதனை அவர்கள் சோதனை செய்யவே இந்த வினா
அதாவது வளங்கள் முழுமையாகவும் ,திறமையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலமையினையே உற்பத்தி சாத்திய வளையியின் மேல் உள்ள ஒவ்வொரு புள்ளியும் காட்டும்.அவதானமாக இருங்கள்
மாணவர்களில் பலருக்கும் ஒரு பெரும் சந்தேகம் உண்டு
அதென்னப்பா நிறை தொழில் /நிறை தொழில் மட்டம்.??அது உற்பத்தி சாத்திய வளையியில் உள்ள ஒரு புள்ளி தானே ?/
அல்லது வழையிக்கு உள்ளேயும் அது அமையுமா??
அற்றன்ஷன்...
வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் அது நிறை தொழில்,
ஆனால் முழுமையாக பயன்படுத்தப்பட்ட வளங்கள் திறமையாக பயன் படுத்தப்பட்டால் மட்டுமே அது நிறை தொழில் மட்டம்.
1-நிறை தொழில் பொருளாதாரத்தில் வளங்களின் திறமையான பயன்பாடு?
இது நிறை தொழில் மட்டம்

.
மேலே உள்ள படத்துக்காண விடையில் பூரணமாக என்கிற சொல் முழுமையாகவும் திறமையாகவும் என கருதி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
எதனை குறிக்கிறது??
உற்பத்திக்கு சாத்தியமான பகுதியை.
உற்பத்திசாத்திய வளையி எதனை குறிக்கின்றது எனில் அருமையானதும் மாற்றுப்பயன்பாடுள்ள வளங்களினை முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏனயவை மாறாத நிலையில்,தரப்பட்ட தொழில் நுட்பத்தின் கீழ் பெறப்படுகின்ற உற்பத்தி, சேர்க்கை புள்ளிகளினை இணைத்து வரையப்படும் கோடு ஆகும்.
ஆனால் இதே வினாவை நிறை தொழில் பொருளாதாரத்தில் வளங்களின் திறமையற்ற பயன்பாடு என கேட்டாள்?
அது உற்பத்தி சாத்திய வளையியின் உட்புறத்திலேயே /இடது புறத்திலே புள்ளியிட்டு காட்டப்படும்.
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக