வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பற்றாக்குறை என்றால் என்ன? / What do you mean by Shortage in Economics?


பற்றாக்குறை
அருமை என்பதில் இருந்து வேறுபட்ட எண்ணக்கரு ஆகும்.
அது என்ன ஜீ பற்றாக்குறை?
Causes of Shortages
ஒரு குறிப்பிட்ட நடைமுறை விலையில் மக்கள் ஒரு பொருளை அதிக கொள்வனவு செய்ய முயற்சிக்கின்ற பொளுது ஏற்படுவதே பற்றாக்குறை ஆகும்.இந்த பற்றாக்குறை ஏற்படுவதற்கு 3 பிரதான காரணங்களை கூறலாம்


1)கேள்வி அதிகரிப்பது அதாவது கேள்வி அதிகரிக்கிற பொளுது கேள்விக்கோடு வெளி நோக்கி நகரும் இது விலை தவிர்ந்த ஏனைய காரணிகலால் ஏற்படுவது,இதனால் கேள்விக்கோட்டின் ஊடே அதிகரித்து நகராது .இதனை கேள்வியில் படிப்போம்.
உதாரணம் வருமானம் அதிகரித்தால் சாதாரண பொருளுக்காண கேள்வி அதிகரிக்கும்,அதே வேளை இழிவுப் பண்டங்களுக்குரிய கேள்வி குறையும்.

இழிவுப்பண்டம்

குறைந்த வருமானமுள்ள மக்களால் பெருமளவு கொள்வனவு செய்யப்படும் பொருட்கள்.உதாரணம்
பாண்.

2)நிரம்பலில் ஏற்படும் வீழ்ச்சி அதாவது நிரம்பல் குறைவு,நிரம்பல் கோடு இடதுபுறம் நகரும்,இது விலை தவிர்ந்த ஏனைய காரணிகளின் மாற்றத்தினால் ஏற்படுவது.எனவே நிரம்பல் கோட்டின் ஊடே மேல் நோக்கி நகராது.இதனை நிரம்பலில் படிப்போம்.
உதாரணம்
காலநிலை பாதகமாக அமைதல்
நல்ல மழை புயலுடன் ,அரிவு வெட்டும் வேளை ,ஆனால் இப்போ நெல்லின் நிரம்பல் குறைவடைகிறது.

 3) அரசாங்கத்தின் தலையீடு
அரசாங்கம் ஒரேஇரவில் கொள்கைகளை மாற்றுதல் உதாரணமாக,
வாகன இறக்குமதிக்கு வரிச்சலுகை இனிமேல் இல்லை.இப்படி சொன்னால் என்றிருந்து இல்லையோ அதற்கு முன் கேள்வி அதிகம் கூடும்,அதற்கு பின் சடுதியாக குறையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக