வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் அருமையுடன் மாற்றுப் பயன்பாட்டையும் கொண்டுள்ளதால் அவற்றைப் பல்வேறுபட்ட நோக்கங்களுக்கிடையே பகிர்வு செய்ய முற்படும் போது தோன்றுவதே தெரிவுப் பிரச்சனையாகும்.
தெரிவின் போதே அமயச் செலவு எனும் எண்ணக்கரு முக்கியம் பெறுகின்றது.
தெரிவுப் பிரச்சனை தோன்றக் காரணம்
வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் அருமையாக இருத்தல்.
வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருத்தல்.
அருமை – தெரிவு தொடர்பு
விருப்பங்கள் போல வளங்களும் எல்லை அற்றதாக இருப்பின் தெரிவு தோன்றி இருக்காது. ஆனால் மாற்றுப் பயனுடைய வளம் அருமையாக அமைவதால் அதனை வேறுபட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்படும் போது எதனை, எந்தளவில், எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்தல் எனும் தெரிவுப் பிரச்சனைகள் தோன்றம் பெறுகின்றன.இவை அடிப்படைப் பொருளாதார
பிரச்சனகளாகும்.
அதனாலேயே அருமை தெரிவை உருவாக்குகின்றது என்பர்.
வளங்கள் வரையறையற்றதாகவோ அல்லது ஒரு பயன்பாட்டை மட்டும் கொண்டதாகவோ இருப்பின் தெரிவு எனும் பிரச்சினை தோற்றம் பெறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக