பொருட்கள் சேவைகள் மற்றும் உற்பத்தி காரணிகளை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் ஆகிய நோக்கங்களுடன் கொள்வனவாளர்களும் விற்பனையாளர்களும் தொடர்புறும் எந்தவொரு சந்தர்ப்பங்களும் சந்தை ஆகும் ஆகும்.இதில் விலையே முக்கிய கருவியாகும்.ஒரு நிறை போட்டி சந்தையில் பெருமளவான உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் காணப்படுவர்.இதில் கேள்வி வளையி னது ஒவ்வொரு புள்ளியிலும் நுகர்வோரால் கொள்வனவு செய்ய தயாராகவுள்ள கோள்வி தொகைகளினை குறிக்கும்,அதேவேளை நிரம்பல் வளையினது ஒவ்வொரு புள்ளியும் உற்பத்தியாளர்களினால் வழங்கப்படத் தயாராக உள்ள நிலமைகளினை குறிக்கும்.கேள்வி வளையியும் நிரம்பல் வளையியும் வெட்டும் புள்ளியானது,கேள்வியும் நிரம்பலும் சமப்படும் நிலையாகும்,இந்த நிலையில் சந்த சமனிலை ஏற்படுகிறது.அதாவது உற்பத்தியாளரும் நுகர்வோரும் திருப்தியடையும் நிலை இதுவாகும்
- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
சனி, 8 ஜூன், 2019
வழிவந்த கேள்வி/DERIVED DEMAND -நேர்கேள்வி (Direct Demand)
ஒரு உள்ளீட்டுக்கான அல்லது உற்பத்தி காரணிகளுக்கான கேள்வீயானது அவ் உள்ளீட்டினையோ அல்லது உற்பத்தி காரணிகளையோ பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு அல்லது பொருட்கள் சேவைகள் மூலம் ஏற்படுத்தப்படுமாயின் அது வழிவந்த கேள்வியாகும் உதாரணம் இரும்புக்கான கேள்வியானது கார் என்கிற வெளியீட்டுக்கான கேள்வி மூலம் ஏற்படுதல்
காருக்கான கேள்வி அதிகரிப்பானது ,இரும்புக்கான கேள்வியை அதிகரிக்கும்.
நேர்கேள்வி
• நுகர்வுப்பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கேள்வி இதுவாகும், அதாவது நுகர்வுப்பொருட்களுக்கும் சேவைகளுக்கும், இறுதிப்பாவனை நோக்கம் கருதியே கேள்வி ஏற்படுவதால் அதனை நேர்கேள்வி என்பர்.
• EX –அரிசிக்கான கேள்வி
கேள்விக்கோட்பாடு மற்றும் கேள்வி விதி
உள்ளடக்கம்
- கேள்விக் கோட்பாடு
- கேள்வியை வரவிலக்கணப்படுத்தல்
- தனியார் கேள்வியும் சந்தை கேள்வியும்
- கேள்விச்சார்பு
- கேள்வி விதி
- பயன்
- எல்லைப்பயன் விதியிலிருந்து எவ்வாறு கேள்விக்கோடு பெறப்பட்டது என ஆராயுங்கள்??
- கேள்வி ஒடுக்கம்
- கேள்வி நீட்டம்
- இடமிருந்து வலமாக சரிந்து செல்ல காரணம் என்ன?
- விலைவிளைவு = பிரதியீட்டு விளைவு + வருமான விளைவு
- விலை விளைவு
- கிபன் பண்டங்கள் என்றால் என்ன?
- பிரதியீட்டு விளைவு என்றால் என்ன?
வியாழன், 6 ஜூன், 2019
சிவப்பு எச்சரிக்கைகள் - 5 பல் தேர்வு வினாக்களுக்கானது GCE A/L
சிவப்பு எச்சரிக்கை 1
ஒருமை விடையா? ...................பன்மை விடையா??
அதாவது ஒரு விடைக்கு கோடு போடுவதா அல்லது ஒன்றிற்கு ஏற்பட்டதற்கு கோடு போடுவதா என்பதனை கவனமாக வினாக்களின் தன்மை ,முடிவிடங்களை வைத்து மாணவர்கள் கிரகிக்க வேண்டும்.

இதில் அவர்கள் எதை எனக் கேட்டதனால் ஒரு விடை ஆகையினால்,ஏதாவது ஒன்றிற்கு கோடிட்டிருந்தால் முழு
புதன், 5 ஜூன், 2019
1-வேலையின்மை குறைவது /2-அமையச்செலவு பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு / 3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
உங்களுக்கு அவர்களே ஒரு உற்பத்தி சாத்திய வளையினை தந்து, வேலையின்மை குறைவதாக ஒரு வினாவை தொடுத்து,பின்னர் ஒரு பொருளினோ அல்லது இரு பொருளினதுமோ உற்பத்தி இயளவு குறைவதாகவோ கூடுவதாகவோ கூறி உங்களின் கவனத்தை திசை திருப்பும் முறையினை பாருங்கள்
உங்களுக்கு தெரியும் உற்பத்தி சாத்திய வளையி நகர்வதற்கான இரு பிரதான காரணங்கள்.இதானால் பொருளாதார வழர்ச்சி ஏற்படும்.
1-வளங்களின் அளவு அதிகரித்தல்
2-வளங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல்
மேற்குறிப்பிட்ட இந்த இரு பிரதான காரணங்களாலும் சாத்திய வளையியே நகரும் அதாவது இடப்புறமோ அல்லது வலப்புறமோ நகரும்.
மிக மிக அவதானம்,
1-வேலையின்மை குறைவது என்பது அமையச்செலவு
2-பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு என்பதும்
3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
இதனால் வளையி நகராது,வளையிக்கு உள்ளே ஏற்கனவே உள்ள புள்ளி மேல் நோக்கி நகரும்.
3 வினாவும் ஒன்றே.
இதிலேதாவது ஒரு வினாவினை தொடுத்து விட்டு,அடுத்த வினாவினை உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு தொடர்பாகவோ அல்லது சாதாரண வேலயின்மை அதிகரிப்பு தொடர்பாகவோ தொடுத்தால்.நீங்கள் குழம்புவீர்கள்,என்பது அவர்களுக்கு தெரியும்.
சில மாணவர்கள் வேலையின்மை குறைவு என்பதனை உள்நேக்கி மேலும் நகர்த்திவிடுவர்.அது அல்ல
மாறாக
உங்களுக்கு தெரியும் உற்பத்தி சாத்திய வளையி நகர்வதற்கான இரு பிரதான காரணங்கள்.இதானால் பொருளாதார வழர்ச்சி ஏற்படும்.
1-வளங்களின் அளவு அதிகரித்தல்
2-வளங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல்
உற்பத்திச் சாத்திய எல்லை வலதுபுறம் / வெளிப்புறம் நகர்வடைய பொறுப்பாகவுள்ள காரணிகள்/
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள்
1. 1-வளத்திரட்சி அதிகரித்தல்
a.
புதிய வளங்களின் பயன்பாடு/புதிய வளக்கண்டுபிடிப்பு
b.
புதிய முதலீட்டுப் பெருக்கம்
c.
சிறப்படைந்த தொழிற்படையின் குடிவருகை
d.
வெளிநாட்டு முதலீட்டு வருகை
e.
வெளிநாட்டு உதவி கிடைத்தல்
f.
கீழ்கட்டுமான விருத்திகள்/உட்கட்டுமான விருத்திகள்
2. 2- வள விளைதிறன் அதிகரித்தல்
- · நவீன நுட்பங்களின் வருகை/தொழில் நுட்ப முன்னேற்றம்
- · முகாமைத்துவ மேம்பாடு
- · மனித மூலதன விருத்தி
- · தொழிற்படை சிறப்புத் தேர்ச்சியடைதல்
- · உலகமயமாதல் விரிவடைதல்
1.
நாடொன்றின் உற்பத்தி இயலளவை நலிவடையச் செய்யும் காரணிகள் /உற்பத்திச் சாத்திய வளையியை இடப்புறம் நகரச் செய்யும் காரணிகள்
2.
வளத்திரட்சி குறைதல் / வளங்கள் அழிவடைதல்.
a.
இயற்கை அனர்த்தங்களால் வளங்கள் அழிவடைதல்.
b.
போரினால் வளங்கள் அழிவடைதல்.
c.
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல்/ வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படல்.
d.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல்.
e.
சிறப்படைந்த தொழிற்படையின் குடி அகல்வுகள்
f.
சனத்தொகை அழிவுகள்
3.
வளவிளைதிறன் திறன் குறைதல்.
a.
தொழில்நுட்ப தொகுதி அழிதல்.
b.
முகாமைத்துவத்தின் பின்னடைவு
c.
தொழிலாளர் வினைத் திறன் பின்னடைதல்
d.
தொழிற்படையின் சிறப்புத் தேர்ச்சியில் பின்னடைவு
மேற்குறிப்பிட்ட இந்த இரு பிரதான காரணங்களாலும் சாத்திய வளையியே நகரும் அதாவது இடப்புறமோ அல்லது வலப்புறமோ நகரும்.
மிக மிக அவதானம்,
1-வேலையின்மை குறைவது என்பது அமையச்செலவு
2-பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு என்பதும்
3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
இதனால் வளையி நகராது,வளையிக்கு உள்ளே ஏற்கனவே உள்ள புள்ளி மேல் நோக்கி நகரும்.
3 வினாவும் ஒன்றே.
இதிலேதாவது ஒரு வினாவினை தொடுத்து விட்டு,அடுத்த வினாவினை உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு தொடர்பாகவோ அல்லது சாதாரண வேலயின்மை அதிகரிப்பு தொடர்பாகவோ தொடுத்தால்.நீங்கள் குழம்புவீர்கள்,என்பது அவர்களுக்கு தெரியும்.
சில மாணவர்கள் வேலையின்மை குறைவு என்பதனை உள்நேக்கி மேலும் நகர்த்திவிடுவர்.அது அல்ல
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









