சனி, 1 ஆகஸ்ட், 2020

தேசிய வருமான கணக்குகளினை கணிப்பதன் நன்மைகள்

1.      தேசியக் கணக்குகளால் வெளிப்படுத்தப்படும் தரவுகள் பொருளாதார முகாமைத்துவத்துக்கு அவசியமாகும்.

2.      விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளடக்குகின்றது.

3.      இத்துறைகளினால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் செய்யப்படும் சார்புரீதியான பங்களிப்பின் முக்கியத்துவப்படி பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களை விளக்க முடியும்.

4.      மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறைரீதியான பங்களிப்பைக் கருத்திற் கொண்டு சார்புரீதியாக பலவீனமான துறைகளை மேலெழச் செய்வதற்காக கொள்கையாக்கங்களைச் செய்யமுடியும்.

5.      உற்பத்திக் காரணிகளிடையே வருமானம் பங்கிடப்படும் விதம் தேசிய கணக்குத்தரவுகளின் மூலம் காட்டப்படுகிறது.

6.      தேசியக் கணக்குப் புள்ளி விபரங்களைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிடல் மற்றும் சர்வதேச ஒப்பீடுகளைச் செய்யமுடியும்.

7.      தேசிய வருமானம் / உற்பத்தியை நாட்டின் நட்டாண்டுச் சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் தலா நபர் வருமானத்தைப் பெறமுடியும்.

8.      நிலையான விலைகளின் கீழ் மொத்தத் தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அளவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக