திங்கள், 10 ஜூன், 2019

தனி நபர் கேள்வி சமன்பாடும் சந்தை கேள்வி சமன்பாடும்


கேள்வி சார்பு என்பது விலையின் ஒரு தொழிற்பாடாகும்
QD= f(P)
மொத்த கேள்வி சமன்பாடு என்பது தனிப்பட்ட கேள்வி சமன்பாடுகளின் மொத்தமாகும் அதாவது இங்கு   QD என்பது மொத்த கேள்வி சமன்பாட்டை குறிக்கும்,QDa+QDb+QDc என்பன தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்குமான கேள்விகளாகும்.
QD=QDa+QDb+QDc...QDn
Qa=10–2p
+
Qb=15–6p 
+                     
Qc=18–9p  
----------------------                    

Q / Qd=43-17p
--------------------
சந்தை கேள்வி சமன்பாடு = 43–17p
கேள்வி  என்பதனை Q என்றோ Qd என்றோ குறிப்பிடலாம் ,குழம்பவேண்டியதில்லை

கேள்வி விதிக்கு முரணான இரு சந்தர்ப்பங்கள் எவை?

1-     வெப்ளன் விளைவு
வெப்ளன் என்ற பொருளியல் அறிஞரின் கருத்தே வெப்ளன் விழைவாகும்,அதாவது ஒரு பொருளுக்கான விலையானது உயரும்போது செல்வந்தர்கள் அப்பொருளினை மிக அதிகம் கொள்வனவு செய்வர்,ஏனெனில் கௌரவம்,மதிப்பு எனக் கருதுவர். மிக உயர்ந்த விலையுடைய ஆடம்பரப்பொருட்கள்.
உதாரணம் - மாணிக்கம்,ரத்தினம்,

சனி, 8 ஜூன், 2019

சந்தை சமனிலை /Market Equilibrium

பொருட்கள் சேவைகள் மற்றும் உற்பத்தி காரணிகளை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் ஆகிய நோக்கங்களுடன் கொள்வனவாளர்களும் விற்பனையாளர்களும் தொடர்புறும் எந்தவொரு சந்தர்ப்பங்களும்  சந்தை ஆகும் ஆகும்.இதில் விலையே முக்கிய கருவியாகும்.ஒரு நிறை போட்டி சந்தையில் பெருமளவான உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் காணப்படுவர்.இதில் கேள்வி வளையி னது ஒவ்வொரு புள்ளியிலும் நுகர்வோரால் கொள்வனவு செய்ய தயாராகவுள்ள கோள்வி தொகைகளினை குறிக்கும்,அதேவேளை நிரம்பல் வளையினது ஒவ்வொரு புள்ளியும்  உற்பத்தியாளர்களினால் வழங்கப்படத் தயாராக உள்ள நிலமைகளினை குறிக்கும்.கேள்வி வளையியும் நிரம்பல் வளையியும் வெட்டும் புள்ளியானது,கேள்வியும் நிரம்பலும் சமப்படும் நிலையாகும்,இந்த நிலையில் சந்த சமனிலை ஏற்படுகிறது.அதாவது உற்பத்தியாளரும் நுகர்வோரும் திருப்தியடையும் நிலை இதுவாகும்

வழிவந்த கேள்வி/DERIVED DEMAND -நேர்கேள்வி (Direct Demand)



ஒரு உள்ளீட்டுக்கான அல்லது உற்பத்தி காரணிகளுக்கான கேள்வீயானது அவ் உள்ளீட்டினையோ அல்லது உற்பத்தி காரணிகளையோ பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு அல்லது பொருட்கள் சேவைகள் மூலம் ஏற்படுத்தப்படுமாயின் அது வழிவந்த கேள்வியாகும் உதாரணம் இரும்புக்கான கேள்வியானது கார் என்கிற வெளியீட்டுக்கான கேள்வி மூலம் ஏற்படுதல்
காருக்கான கேள்வி அதிகரிப்பானது ,இரும்புக்கான கேள்வியை அதிகரிக்கும்.


நேர்கேள்வி
             நுகர்வுப்பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கேள்வி  இதுவாகும், அதாவது நுகர்வுப்பொருட்களுக்கும் சேவைகளுக்கும், இறுதிப்பாவனை நோக்கம் கருதியே கேள்வி ஏற்படுவதால் அதனை நேர்கேள்வி என்பர்.

             EX –அரிசிக்கான கேள்வி

கேள்விக்கோட்பாடு மற்றும் கேள்வி விதி

உள்ளடக்கம்

  1. கேள்விக் கோட்பாடு
  2. கேள்வியை வரவிலக்கணப்படுத்தல்
  3. தனியார் கேள்வியும் சந்தை கேள்வியும்
  4. கேள்விச்சார்பு
  5. கேள்வி விதி
  6. பயன்  
  7. எல்லைப்பயன் விதியிலிருந்து எவ்வாறு கேள்விக்கோடு பெறப்பட்டது என ஆராயுங்கள்??
  8. கேள்வி ஒடுக்கம்
  9. கேள்வி நீட்டம்
  10. இடமிருந்து வலமாக சரிந்து செல்ல காரணம் என்ன?
  11. விலைவிளைவு = பிரதியீட்டு விளைவு + வருமான விளைவு
  12. விலை விளைவு
  13. கிபன் பண்டங்கள் என்றால் என்ன?
  14. பிரதியீட்டு விளைவு என்றால் என்ன? 

அடிப்படைபொருளாதார பிரச்சனைகள்