செவ்வாய், 4 ஜூன், 2019

அலகு 1 ,பொருளியலில் முக்கிய வினாக்களும் விடைகளும் - உத்திகளும் - பாகம்1

கவனக்கலைப்பானுக்குள் சிக்காமல் விடைகளை தெரிவு செய்ய மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

1-ஒருமை விடையா/ஒரு விடையா?
2-பன்மை விடையா/ பல விடையா?
கண்டுபிடிப்பது எப்படி??? உதாரணம்

ஒரு விடைக்குரிய சொற்களின் முடிவிடங்கள்

இயல்பு,எது, காரணி,சூழ்நிலை,யாது,சரியான கூற்று,தொடர்பு,என்ன...

ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் வருவதற்கான முடிவிடங்கள்
இயல்புகள்,யாவை,எவை,காரணிகள்,சூழ்நிலைகள்,கூற்றுக்கள்,தொடர்புகள்

மாணவர்கள் வினாவினை வாசிக்கும் போது உங்களது அடிப்படை தமிழ் அறிவினை வைத்து கிரகிக்க வேண்டும் உதாரணமாக ,எது? எவை? எனபனவற்றை சரியாக புரிய வேண்டும்.
எது என கேள்வி கேட்கப்பட்டால் 1 விடை மட்டுமே சரியாக அமையும்.அதில் குழம்பக்கூடாது.எவை எனக் கேட்க்கப்பட்டால் 1ற்கு மேற்பட்ட விடைகள் சரியானவையாக அமையும்.

பூச்சிய அமையசெலவுக்கான காரணிகள் எவை?
உண்மையில் 3 நிலமைகளில் இது நடைபெறும்.

1-மாற்றுப்பயன்பாடு அற்ற நிலையில்,அதாவது தெரிவு அற்ற நிலையில்,அதாவது ஒரு பொருள் மட்டும் இருக்கின்ற நிலமையில்.

2-வளங்களின் அருமை தன்மை அற்ற பொருட்கள் தொடர்பில்,அதாவது இலவசப்பொருட்களுக்கு

3-வேலையின்மை குறைகின்ற போது,அதாவது வேலையின்மை குறைகின்றா போது ,ஏற்கனவே இருந்த வேலயின்மையின் புள்ளியானதுகொஞ்சம் உயர்வான புள்ளிக்கு செல்லும் .எனவே இரு பக்கமும் இழப்புக்கள் இருக்காது அதாவது X;Y 2பொருட்களுக்கும்

வெள்ளி, 31 மே, 2019

1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்




1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&


1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்








1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு





வியாழன், 30 மே, 2019

1.3.1 .உற்பத்திக்காரணிகள்

நிலம் –
  1. •             இயற்கையின் வளம்.
  2. •             அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
  3. •             நிரம்பல் நெகிழ்வற்றது.
  4. •             வினைதிறனை உயர்த்தலாம்.
  5. •             நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலை) வாடகையாகும்.

(உ – ம்) : காற்று, சூரிய ஒளி
உழைப்பு –
  1. •             உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
  2. •             அசையும் தன்மையுடையது.
  3. •             ஓரினத் தன்மையற்றது.
  4. •             கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின்                                     விளைதிறனை உயர்த்தலாம்.
  5. •             உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
  6. •             உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.

(உ – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.

1.2.3.வளங்கள் என்றால் என்ன?


1.2.3.1-உற்பத்திக்கு பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.
பொருளியலில் இவை இரு வகைப்படும்.
1.       பொருளாதார வளம்
2.       பொருளாதாரம் அல்லா வளம்
பொருளாதார வளம்
•                     வரையறுக்கப்பட்டதும், அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.
•                     இவை அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.
(உ – ம்) : நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி
இதன் பண்புகள்

1.2.2 .பொருள் /பண்டம்

 இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள் என வகைப்படுத்தப்படுகிறது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
1. இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவற்றது.
2. அருமையற்றவை.
3. இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
4. வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
5. நுகர்வில் போட்டியற்றது.

.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
.
1. பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவுடையது.
2. அருமையானவை.
3. மனித முயற்சியால் உருவானது.
4. வளப்பயன்பாட்டு செலவு உடையது.
5. நுகர்வில் போட்டிக்குரியது.

1.2.1.மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு

தேவைகள் (NEEDS) 

மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
• இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
• இது வரையறுக்கப்பட்டது.
• எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
• இது வரையறுக்கப்படாதது.
• நபருக்கு நபர் வேறுபடும்.
• சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் –  பொருளாதாரம் அல்லாத் தேவைகள்   
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.

1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்