வரைவிலக்கணம்
கிப்ஃபன் பண்டம்
கிப்ஃபன் பொருட்கலென்பவை விலைக்கும் கேள்விக்கும்
நேர்த்தொடர்புடைன ,காரணம் வருமான விளைவினால் விலை உயரும் போது நெருங்கிய பிரதியீடுகளினை
மக்கள் நாடுவர்.
இங்கே விலையானது அதிகரிக்க மக்கள் இப்பண்டத்தை
அதிகம் கொள்வனவு செய்யும் நிலை உண்டு.காரணம் கிப்ஃபபன் பண்டங்கள் என்பவை குறைந்த விலைஉடைய,குறைந்த
தரமுடைய குறைந்த வருமானமுடைய மக்களினால் பெருமளவு கொள்வனவுசெய்யப்படும் பண்டங்களாகும்.
ஆனால் இப்போ விலை உயர்ந்துள்ள நிலையில்
இவற்றினை விட சற்று விலை குறைந்த ஆனால் ஏற்கனவே இருந்த விலையில் வாங்க முடியாமையினால்,அவற்றை
விட வேறு விலை உயர்ந்த பொருட்களினை இதற்கு பதிலாக பிரதியீடுகளினை மக்கள்
நாடுவர்.எனவே
கிப்ஃபன் பண்டங்களின் விலை அதிகரிக்க கேள்வித்தொகையும்
அதிகரிக்கும் மாறாக விலை குறைய கேள்வித்தொகையும் குறையும்.
வரைவிலக்கணம்
இழிவுப்பண்டம்
வருமானத்துக்கும் கேள்விக்கும் எதிர் தொடர்பு
காணப்படும் பண்டம்
இழிவுப்பண்டம் ஆகும்.அதாவது வருமானம் அதிகரிக்க
குறித்த பண்டத்தினை வ்டுத்து வேறு தரமான பண்டங்களினை மக்கள் நாடி செல்வதனை இது குறிக்கும்
அதே போலவே வருமானம் குறையின் தரமற்ற பொருட்களினை மக்கள் கொள்வனவு செய்வர்,இதற்கான வருமானம்
சார் கேள்வி நெகிழ்ச்சி எதிர்க்கணியமாகும்.
உதாரணம் பழைய கார் வைத்திருப்பவர்,வருமானம்
கூடியவுடன் புதிய காரை வாங்குதல்.
முக்கிய வேறுபாடுகள்
முக்கிய வேறுபாடுகள்
1.
விலைக்கும் கேள்விக்குமிடையே நேர்தொடர்பு காணப்படுகின்ற பண்டம்
கிப்ஃபன் பண்டம்,ஆனால்
வருமானத்துக்கும் கேள்விக்கும் எதிர் தொடர்பு காணப்படும் பண்டம் இழிவுப்பண்டம்
2.
கேள்வி விதியினை கிப்ஃபன் பொருட்கள் புறந்த்தள்ளுகின்றன,ஆனால்
கேள்வி விதியினை இழிவுப்பண்டங்கள் ஏற்று நடக்கின்றன.
3.
கிஃப்பன் பொருட்களிக்கு நெருங்கிய பிரதியீடு உண்டு ஆனால் இழிவுப்பண்டங்களுக்கு
நல்ல தரம் மற்றும் தரமின்மை பற்றிய வேறுபாடு காணப்படும்.
4.
கிஃப்பன் பொருட்களுக்கான மொத்த விலை விளவு அதாவது வருமான விளைவையும்
,பிரதியீட்டு விளைவையும் கூட்டிய தொகை ,விலை குறைகின்ற போது எதிர்க்கணியமாகும் ஆனால்
விலை குறைகின்றபோது இழிவு பண்டங்களுக்கு மொத்த விலை விளைவு நேர்க்கணியமாகும்.
5.
கிப்ஃபன் பண்டங்களுக்கான கேள்விக்கோடானது கீழிருந்து மேல் நோக்கி
செல்லும் ஆனால் ,இழிவுப்பண்டங்களுகான கேள்விக்கோடானது மேழிருந்து கீழ்நோக்கி செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக