செவ்வாய், 20 அக்டோபர், 2020

தேசிய வருமானம் -National Income - Part -1

தேசிய வருமானம்

குறித்த நாடு, ஒரு வருட காலப்பகுதிக்குள் கிடைத்த காரணிச்சேவைகளைக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், உற்பத்தி செய்யப்பட்ட எல்லா இறுதிப் பொருட்கள் சேவைகளின் பணப்பெறுமதியே தேசிய வருமானமாகும்.

இங்கு இறுதிப் பொருட்கள் சேவைகள் எனக் குறிப்பிடப்படுவதற்கு காரணம் தேசிய வருமானத்தைக் கணிப்பிடுவதில் ஏற்படக் கூடிய இரட்டை எண்ணலைத் தவிர்ப்பதற்காகவேயாகும்.

இரட்டை எண்ணல்

இரட்டை எண்ணல் எனும் போது தேசிய வருமானத்தைக் கணிக்கும் போது ஒரேபொருள் அல்லது ஒரேபெறுமதி இரு முறை கணிப்பீட்டிற்குள் உட்படுத்தப்படுவதனைக் குறிக்கும்இவ்விரட்டைக் கணிப்பீட்டுத் தவறானது உற்பத்தி வருமான வழிகளில் கணிக்கின்ற போது - ஏற்படுகின்றதுஅதாவது வருமான வழியில் தேசிய வருமானம் கணிப்பிடுகின்ற போது குறிப்பிட்ட வருடத்தில் உற்பத்தியுடன் தொடர்பற்ற முறையில் பெறப்படும் வருமானங்களான ஒருபக்கக் கொடுப்பனவுகள் (கைமாறல் கொடுப்பனவுகள்தேசிய வருமானக் கணிப்பீட்டிற்குள் சேர்க்கப்படும் போது இரட்டை எண்ணல் தவறு ஏற்படுகின்றது.

கைமாறல் கொடுப்பனவுகள்

கைமாறல் கொடுப்பனவுகள் எனும் போது குறிப்பிட்ட வருடத்தில் உற்பத்தியுடன் தொடர்பற்ற முறையில் செலுத்தப்படும் கொடுப்பனவுகளாக அதாவது ஒருபக்க சார்பான கொடுப்பனவுகளாக இவை காணப்படும்அதாவது எவ்வித காரணிச் சேவையையும் வழங்காமல் பெறப்படும் வருமானங்களான உணவு மானியம்பொதுப்படு கடன் வட்டி ஓய்வூதியம்நன்கொடை போன்றவற்றைக் கூறலாம்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக