- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
வெள்ளி, 25 அக்டோபர், 2019
வெள்ளி, 18 அக்டோபர், 2019
வரி விதிப்பும் சமனிலை மாற்றங்களும் ,வரி தாங்கல்களும்
1. வரி விதிப்பு அற்ற நிலையில் சந்தை நிலமைகள்
கேள்வி சமன்பாடு: P = 32 - 8Qd
நிரம்பல்சமன்பாடு: P = 12 + 2Qs
• சமநிலை விலை தொகைகளினை காண்க?
2. விற்பனையாளர் மீது வரி 2 ரூபாய் அலகுகளுக்கு விதிக்கப்படுகிறது எனவே புதிய நிரம்பல் சமன்பாடானது இவ்வாறு மாறுகின்றது
(P - 2) = 12 + 2Qs
*அதாவது ஒவ்வொரு அலகுக்கும் 2 ரூபாய் வீதம் வரி அறவிடப்படுகின்றது
• வரியுடன் கூடிய சந்தை சமனிலை விலை தொகைகளினை காண்க
3. வரியில் யார் அதிக பங்கினை செலுத்துகிறார்? விற்பனையாளரா அல்லது நுகர்வோரா?
4. மொத்த வரி வருமானம் எவ்வளவு
5. வரைபடத்தில் அனைத்தையும் வரைக
விடைகள்
1. பழைய சந்தை சமனிலை
• Qs = Qd = Q
32 - 8Q = 12 + 2Q ---> - 10Q = - 20
Q = 2 P = 32 - 8Q = 32 - 16 = 16
2. வரி விதிப்பின் பின்னரான சமனிலை
Qs = Qd = Q
2+12 + 2Q = 32 - 8Q
14 + 2Q = 32 - 8Q ---> 10Q = 18
Q = 1.8 P = 32 - 8Q = 32 - 14.4 = 17.6
3. வரிச்சுமை
புதிய சமனிலை விலை -பழைய சமனிலை விலை =நுகர்வோன் வரி சுமை
புதிய விலை=17.6
பழைய(வரிக்கு முன்னரான சமனிலை விலை)=16
நுகர்வோன் வரி சுமை = 17.6-16
=1.6
உற்பத்தியாளன் வரி சுமை = வரி விதிப்பின் அளவு - நுகர்வோன் வரி சுமை
வரி விதிப்பின் அளவு = 2
2 - 1.6
= 0 . 4
4. மொத்த வரி வருமானம் = வரிக்கு பின்னரான சமனிலை தொகை X மொத்த வரி
1 . 8 X 2 = 3.6

கேள்வி மாற்றம் தொடர்பான கணித,வரைபட வினா விடை
கேள்வி சமன்பாடு P = 150 - 5Qd
நிரம்பல் சமன்பாடு P = 60
+ 4Qs
பின்வருவன ,அவதானிக்கப்படுகின்றான
·
வருமானமானது P = 200 - 5Qd அதிகரிக்கின்றது
· உற்பத்தி
செலவானது P = 20 + 4Qs குறைகின்றது
1. ஒரே வரைபில்
பழைய சமன்பாடுகளினுடையதும் ,புதிய சமன்பாடுகளினுடையதும் கேள்வி நிரம்பல் கோடுகளினை
ஒரேவரைபில் வரைக?
2. பழைய
புதிய சந்தை சமனிலை விலை தொகைகளினை கணிப்பிடுக?
இவ் வரைபில் விலை மாற்றம்
மற்றும் கேள்வி தொகை மாற்றம் என்பனபற்ரி நீர் என்ன கூற விரும்புகிறீர்?
விடைகள்
1

2> 1. பழைய சந்தை சமனிலை
· Qs = Qd = Q
150
- 5Q = 60 + 4Q
Q = 10
P = 100
2.
வரி விதிப்பின்
பின்னரான சமனிலை
Qs = Qd = Q
200 - 5Q = 20 + 4Q
Q = 20 P = 100
3-> இரண்டு வளையிகளும் ,அதாவது கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகள் இரண்டுமே சம அளவு விகிதத்தில் அதிகரிக்கின்றன.அதனால் இரண்டுமே வலது பக்கம் நகர்வதால் ,விலை மாறாத நிலையில் தொகை அதிகரிக்கிறது,அதாவது வருமானம் அதிகரிப்பதனால் ,கேள்வி அதிகரிக்க,விலை அதிகரிக்கிற அதேவேளை,பொருளின் உற்பத்தி செலவு குறைவடைவதனால் உற்பத்தி அதிகரிக்கிறது.இரண்டுமே சம அளாவுகளில் இடம்பெறுவதனால் விலை மாறாதிருக்க கேள்வி தொகை அதிகரிக்கிறது. இது தவிர்ந்த நிலமைகளில்
அதாவது கேள்வியை விட நிரம்பல் அதிகம் அதிகரிப்பின் விலை குறையும் அது மிகை நிரம்பலாகும்,அதேவேளை கேள்வி நிரம்பலை விட அதிகம் அதிகரிப்பின் மிகை கேள்வி ஆகும் ,எனவே விலை அதிகரிக்கும்.இந்த நிலமைகளில் அரசு விலைக்கட்டுப்படுகளையோ,மானியங்களையோ ,அல்லது வரி விதிப்புக்களினையோ மேற்கொண்டு இரண்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
வியாழன், 17 அக்டோபர், 2019
பரீட்சை எதிர்பார்க்கை வினா விடைகள் பூரண விளக்கத்துடன்!
-குறிப்பு -கேள்வியின் அளவு அதாவது கேள்வித்தொகை விலையினை சார்ந்தது (எடுத்துக்காட்டாக:Qd = 1000 - 5P).
வருமானம், பிற பொருட்களின் விலை, சுவை போன்ற பிற காரணிகள் மாறாது
(செட்டரிஸ் பரிபஸ்-நிபந்தனை என்று அழைக்கப்படுகிறது). இந்த காரணிகளை நாம் கவனித்தால், கேள்வி செயல்பாடு இப்படி இருக்கக்கூடும்:
Qd = 100 - 5P + 0.1Y + 0.5Po (Y = வருமானம், Po = பிற பொருட்களின் விலை)
Qd = 100 - 5P + 0.1 * 8500 + 0.5 * 100 (எடுத்துக்காட்டாக Y = 8500 மற்றும் Po = 100 என்றால்)
Y = வருமானம்=0.1 * 8500=850
Po = பிற பொருட்களின் விலை=0.5 * 100=50
ஆகவே புதிய கேள்வி சமன்பாடு ஆனது இவ்வாறு அமையும்,மாணவர்கள் இதில் குழம்பக்கூடாது,ஏனெனில் சில வேளைகளில் நீங்கள் இப்படி படித்திருக்க வாய்பில்லாமல் இருக்கலாம்,ஆனால் வினா இப்படி கேட்க்கப்படலாம்.வாய்ப்பு அதற்க்குண்டு.இது ஒரு சிறு கணித செயற்பாடு.
அதாவது கூட்டலும் ,பெருக்கலும் கழித்தலும் ,இவ்வளவும் தெரிந்தால் சரி.
எனவே புதியா கேள்வீ சமன்பாடானது இவ்வாறு அமையும்
Y = வருமானம்=0.1 * 8500=850
Po = பிற பொருட்களின் விலை=0.5 * 100=50
Qd = 100 - 5P + 0.1 * 8500 + 0.5 * 100
Qd = 100-5p+850+50
Qd= 1000+5p
இப்போ பாருங்கள்,நாம் வரைபினை வரைய வேண்டுமாயின் ,நிலைக்குத்து அச்சில் விலை வர வேண்டும் அதே வேளை கிடை அச்சில் கேள்வி தொகை வர வேண்டும்
இதன் காரணமாக ,எமக்கு இந்த சமன்பாட்டில் கேள்விக்கோடு கிடை அச்சை வெட்டும் புள்ளி அப்பட்டமாக தெரிகிறாது,அதாவது Qd= 1000+5p a = 1000 அலகுகள் என்பது,அதேவேளை நாம் நிலைகுத்தச்சு கேள்விக்கோடு வெட்டும் புள்ளியினை காண வேண்டுமாயின் விலையினை முன்னிலைபடுத்தி சமன்பாட்டினை இப்படி எழுதலாம்
Qd = 1000 - 5P
5P = 1000 - Qd
P = 200 - 0.2Qd
இப்போ விலை நிலைக்குத்தச்சை வெட்டும் புள்ளி 200 ரூபா என கண்டுகொண்டோம்.
முக்கியமாக மாணவர்கள் ஒன்றினை கவனத்தில் கொள்ளவேண்டும்,அதாவது வருமான அதிகரிப்போ அல்லது பிற பொருட்களின் அதிகரிப்போ கேள்விக்கோட்டின் சரிவை மாற்றா வண்ணம் ,சமாந்தரமாக இடதோ அல்லது வலதோ பக்கம் நகர வைக்கலாம் ,ஆனால் வருமான அதிகரிப்பின் பின்னரான சுவை மாற்றமானது,கேள்விக்கோட்டின் சரிவினையும் பாதிக்கலாம் ,அல்லது கேள்விக்கோட்டினை சமாந்தரமாக நகரவும் வைக்கலாம்.இதனை கேள்வியை தீர்மானிக்கும் காரணிகளில் கற்றிருப்பீர்கள்.
இனி வினாவினை பாருங்கள்
1. P = 200 - 0.2Qd இந்த சமன்பாட்டுக்கு கேள்விக்கேட்டினை வரைக?
2. வருமான அதிகரிப்பானது 250 அலகுகளால் அதிகரிக்க கேள்விக்கோட்டின் நகர்வு எவ்வாறு அமையும் என்பதனை வரைபில் காட்டுக?
3. மேலே கூறப்பட்ட வருமான அதிகரிப்பின் பின்னரான சுவை அதிகரிப்பு காரணமாக,கேள்விக்கோட்டின் சரிவானது 0.25 அலகுகளால் அதிகரிக்கின்றது. இதன்போது புதுய சரிவுடன் கூடிய கேல்விக்கோடு எவ்வாறு அமையும்.

விடைக்கு வாருங்கள்
1 P =
200 - 0.2Qd கேள்விக்கோடு,அதாவது கேள்வித்தொகை பூச்சியமாக உள்ளபோது விலை
200 அலகாகவும் ,அதேவேளை விலை பூச்சியமாக உளபோது கேள்வி தொகை 1000 ஆகவும் உள்ளமையினை
அறிவோம்.எனவே

1.
இதற்கான
விடை கேள்வுக்கோடு D2 ஆகும்,வருமானம் 250 அலகுகளால் அதிகரிக்கின்றதாம்,எமக்கு தெரியும் வருமான அதிகரிப்பானது கேள்விக்கோட்டை சமாந்தரமாக வலதுபுறம் நகர்த்தும்
ஏனெனில்
Qd = 1000 - 5P+250,
என்பவற்றில் வருமான அடிகரிப்பை போட்டால்
முறையே
கிடையச்சின் வெட்டுப்புள்ளி ஏற்கனவே
இருந்த
Qd = 1250 - 5P என மாறும் மாறாக
விலையச்சு சமன்பாடு
P = 250 - 0.2Qd என மாறும்,ஆனால் சரிவு மாறவில்லை என்பதனை கவனத்தில் கொள்க.

புதன், 16 அக்டோபர், 2019
ஆகக்குறைநத் விலையினை அரத்தமுள்ள தாககுவதறகுசில நடவடிகளினை அரசுமேற்கொள்ள வேண்டும்?-விலை ஆதரவுக்கொள்கையினை வரைபின் மூலம் விளக்குக?
உற்பத்தியாளனுககு
நியாயம் கிடைப்பதற்காக ஆகக்குறைந்த
விலைக்கட்டுப்பாட்டை விதித்தாலும் எதிரபாரத்தளவு நன்மை உற்பத்தியளனுக்குக் கிடைக்காது போகும்.
ஆகககுறைநத் விலையினை அரத்தமுள்ள தாககுவதறகுசில நடவடிகளினை
அரசுமேற்கொள்ள வேண்டும்.
1. மிகையினைக் களஞ்சியப்படுத்தல்.
2. இடை உற்பத்திகள்
3. காணப்படும் கேள்வியை அதிகரிக்கச் செய்தல்
4. ஏற்றுமதி
5 இதறகு மேலாக ஆகககு றைநத் விலையை அரத் த் முளள் தாக ஆக்குவதற்கு வதறகு அரசாஙகம்
உத்தரவாத விலைத்திட்டத்தையும் அமுல்படுத்தும்.
உத்தரவாத விலை
அரசினால் விதிகக் பப்டும ஆகக்குறைநத் விலையொனறு உற்பத்தியாளனுக்கு கிடைக்கும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே உத்தரவாதவிலை என்பதனால் கருதப்படுகிறது.
ஆகக்குறைந்த விலையை உத்தரவாத விலையாக்கிக் கொள்வதற்காக அரசாங்கம்
விலை ஆதரவுக் கொள்கை
விலை ஆதரவுக் கொள்கைகளைச் செயற்படுத்தும். ஆகக்குறைந்த விலையை உத்தரவாத விலையாகக் கருதி உற்பத்தியாளனையும்
பாதுகாத்து; உற்பத்தியாளனின்
வருமானத்தை அதிகரிபதற்காக அரசாஙகம்
பின்பற்றும் விலை ஆதரவுக்கொள்கையின் வடிவங்கள் இரண்டாகும்.
1. அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன் கூடிய விலை ஆதரவுக்கொள்கை
2. குறை நிரப்புக்கொடுப்பனவு முறைமை
அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன் கூடிய விலை ஆதரவுக் கொள்கை என்பது
அரசினால் நிர்ணயிகக்ப்பட்ட ஆகக்குறைந்த விலையின் கீழ்
உற்பத்தியாளன் சந்தைக்கு நிரம்பல் செய்ய விரும்பும் மொத்தப் பண்டத்தொகையில் ஆகக்குறைந்த விலையின் கீழ் நுகரவோன் கொள்வனவு செய்த பின்னர், மீதியாகும் மிகையினை அரசாங்கம் கொள்வனவு செய்வதாகும்.
இவ்வாறு ஏற்படும் மிகை நிரம்பலை அரசாங்கம் கொள்வனவு செய்தல் மற்றும்,அதனுடன் தொடரபாக ஏற்படும் விளைவுகளைக் கீழ்த்தரப்படும் வகையில் வரிப்படம் மூலம் காட்ட முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)