வெள்ளி, 11 அக்டோபர், 2019

2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி

2.6-1 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி வரைவிலக்கணம்
 வருமானத்தில் ஏற்படும் விகிசார மாற்றத் திற்கும் கேள்வித் தொகையில் ஏற்படும் விகிதாசார மாற்றத்திற்குமிடையிலான தொடர்பினை விளக்குவதே வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சியாகும். இதனை
கணிப்பிடிதல்
01, விகிதாசார முறையிலும்



02, நெகிழ்ச்சிச் சூத்திரத்தைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ளலாம்

இங்கு
EY - வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
ΔQ - கேள்வி தொகையில் ஏற்பட்ட மாற்றம்
ΔY - வருமானத்தில் ஏற்ப்பட்ட மாற்றம்
Y - ஆரம்ப வருமானம்
Q - ஆரம்ப கேள்வி தொகை

2.6-2 நெகிழ்ச்சி குணகத்தின் அடிப்படையில் கணிப்பிடுதல்
வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சியின் வகைகள்
1.நேர்க்கணிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
2.எதிர்க்கணிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
3.பூச்சிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
நேர்க்கணிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
குறிப்பிட்ட காலப்பகுதுயில் ஏனையவை மாறாத நிலையில்,வருமானம் அரிகரிக்கிற போது கேள்வி அதிகரிப்பதும் மாறாக குறையும் போது கேள்வி குறைவதுமான நிலையினை எவ்வாறு எந்தளவில் என கணிப்பிட்டு கூறுவது நேர்க்கணிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி ஆகும்.
இது ஒன்றிற்கு கூடிய ,ஒன்றிற்கு குறைந்த, ஒன்றிற்க்கு சமனான என  வகைப் படுத்தப்படும்.இது சாதாரண தர பண்டங்களுக்கு காணப்படும்


ஒன்றிற்கு கூடிய வருமானம் சார் கேள்வி

உதாரணம் -ஆடம்பரப்பண்டங்கள்
                            அழகுசாதன பொருட்கள்
நேர்க்கணிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமம்
வருமான மாற்ற வீதாசாரமும் கேள்வித்தொகை மாற்ற வீதாசாரமும் சமனாக உள்ள நிலமைகளினை இது காட்டும்

உ+ம் அத்தியாவசிய ஆஅம்பர தன்மை 2க்கும் இடைப்பட்ட பொருட்கள்

நேர்க்கணிய ஒன்|றுக்கு குறைந்த /நெகிழ்வற்ற வருமானம்சார் கேள்வி நெகிழ்ச்சி - உதாரணம் அத்தியாவசிய பண்டங்கள்


குறிப்பிட காலப்பகுதியில் ஏனையவை மாறாத நிலையில் அதாவது வாருமான மாற்றம் பெரிதாகவும் கேள்வித்தொகை மாற்றம்சிறிதாகவுமுள்ள நிலமை இதுவாகும்.
2-எதிர்க்கணிய வருமானம்சார் கேள்வி நெகிழ்ச்சி
நுகர்வோன் வருமானம் அதிகரிக்கின்றபோது கேள்வி குறைவடவதனை இது குறிக்கும் அதாவது வருமானத்துக்கும் கேள்விக்குமிடையே எர்திர் தொடர்பை இது காட்டும்.உதாரணம் இழிவு பண்டங்கள்



3- பூச்சிய வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏனையவை மாறாத நிலையில் வருமானம் எப்படி அதிகரித்தாலும் கேள்வித்தொகை மாறவே மாறாத பண்டங்கள்.



2.6.3 சாதாரணா தர பண்டம் அத்தியாவசிய பண்டம் ,இழிவு பண்டம் இம்மூன்றையும் வரைபடத்தில் காட்டின் பின்வருமாறு அமையும்,


2.6.4 பயன்பாடுகளும் தீர்மானிக்கும் காரணிகளும் 
தீர்மானிக்கும் காரணிகள்
1. நுகர்வோர் வருமானம்
2. பண்டங்களின் தன்மை
பயன்பாடுகள்
பண்டங்களின் தன்மையை அறிய
சாதன ஒதுக்கீட்டை திட்டமிட
வறுமை நிலையினை அறிய

மக்கள் பிரிவினரிடையே வருமானப் பரம்பலை அளவிட

2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி

2.5-1 விலை சார் குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி
குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க
தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

 கணிப்பீடு

1. PEC = ΔQd % B / ΔP% A
2. PEC = (ΔQd B / ΔP A ) X (P A / Qd B )
இது
3 வகைப்படும்

2.5-2 குணகத்தின் அடிப்படையில் பண்டங்களினை வகைப்படுத்தல்
பிரதியீட்டு பண்டம்
1. நேர்த்தொடர்பு உடையது

இது பதிலீட்டு பண்ட சோடிகளில் காணப்படும். நேர்த்தன்மை கூட போட்டித்தன்மை கூடும்.
பதிலீட்டு பண்டம்பண்டம் ஒன்று தரும் பயன்பாட்டை பிறிதொரு பண்டமும் தரல்.
Ex – சீனி சர்க்கரை
ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த்தொடர்புண்டு
2. எதிர்த்தொடர்பு உடையது -நிரப்பு பண்டம்

இது நிரப்பு பண்ட சோடிகளில் காணப்படும். ஏதிர்த்தன்மை கூட நிரப்புத்தன்மை கூடும்.
நிரப்பு பண்டம்பண்டம் ஒன்றை நுகரும் போது அதனுடன் இணைந்து பிறிதொரு பண்டமும் நுகரப்படல்.
Ex – கணனி மென்பொருள்
ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த் தொடர்புண்டு
ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு


3. பூச்சிய தொடர்பு உடையது-தொடர்பற்ற பண்டம்

எந்தவொரு தொடர்பும் காணப்படாமை ஆகும். இதன் கேள்விக்கோடு விலையச்சுக்கு சமாந்தரமாக காணப்படும்.

தீர்மானிக்கும் காரணிகள்
1. தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதம்
2. குறித்த பண்ட கேள்வி மாற்ற வீதம்

2.5-3 பயன்பாடுகள்

  1. பண்டங்களுக்கிடையிலான இணைத்தொடர்பை அறிய
  2. குறித்த ஒரு செயற்பாட்டின் அளவை திட்டமிட
  3. பொருளாதார கொள்கைகளை திட்டமிட
  4. நிறுவன உற்பத்திக்கான போட்டித்தன்மை தனியுரிமைத்தன்மையை அறிந்து விலையை நிர்ணயிக்க