2.5-1 விலை சார் குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி
குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க
தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.
கணிப்பீடு
1. PEC = ΔQd % B / ΔP% A
2. PEC = (ΔQd B / ΔP A ) X (P A / Qd B )
இது
3 வகைப்படும்
2.5-2 குணகத்தின் அடிப்படையில் பண்டங்களினை வகைப்படுத்தல்
பிரதியீட்டு பண்டம்
1. நேர்த்தொடர்பு உடையது
இது பதிலீட்டு பண்ட சோடிகளில் காணப்படும்.
நேர்த்தன்மை கூட போட்டித்தன்மை கூடும்.
பதிலீட்டு பண்டம் – பண்டம் ஒன்று தரும் பயன்பாட்டை பிறிதொரு பண்டமும் தரல்.
Ex – சீனி சர்க்கரை
• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த்தொடர்புண்டு
2. எதிர்த்தொடர்பு உடையது -நிரப்பு பண்டம்
இது நிரப்பு பண்ட சோடிகளில் காணப்படும்.
ஏதிர்த்தன்மை கூட நிரப்புத்தன்மை கூடும்.
நிரப்பு பண்டம் – பண்டம் ஒன்றை நுகரும் போது அதனுடன் இணைந்து பிறிதொரு பண்டமும் நுகரப்படல்.
Ex – கணனி மென்பொருள்
• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த் தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
3. பூச்சிய தொடர்பு உடையது-தொடர்பற்ற பண்டம்
எந்தவொரு தொடர்பும் காணப்படாமை ஆகும். இதன் கேள்விக்கோடு விலையச்சுக்கு சமாந்தரமாக காணப்படும்.
தீர்மானிக்கும் காரணிகள்
1. தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதம்
2. குறித்த பண்ட கேள்வி மாற்ற வீதம்
2.5-3 பயன்பாடுகள்
- • பண்டங்களுக்கிடையிலான இணைத்தொடர்பை அறிய
- • குறித்த ஒரு செயற்பாட்டின் அளவை திட்டமிட
- • பொருளாதார கொள்கைகளை திட்டமிட
- • நிறுவன உற்பத்திக்கான போட்டித்தன்மை தனியுரிமைத்தன்மையை அறிந்து விலையை நிர்ணயிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக