சாமுவெல்சனின் இலக்கணம் நவீன பொருளாதார இலக்கணமாக கருதப்படுகிறது. மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி சமுதாயம் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பற்றியும், பண்டங்களையும், பணிகளையும் தற்கால், எதிர்கால நுகர்வுக்காக உற்பத்தி செய்கின்றனது என்பது பற்றியும் பயிலும் ஒரு சமூக அறிவியலே பொருளியலாகும்.
இது ஒரு பொதுவான இலக்கணமாகும். இராபின்சன், சாமுவேல்சனின் இலக்கணங்களில் பல பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளையுடைய பற்றாக்குறையான வளங்களை சமுதாயம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப்பற்றிக் கூறும் சமூக அறிவியலே பொருளியல் ஆகும் என்று சாமுவெல்சன் இலக்கணம் வகுத்துள்ளார். இவை அனைத்தும் இராபின்சனின்
இலக்கணத்திலும் காணப்படுகிறது. மனிதர்களும், சமுதாயமும் பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தற்கால், எதிர்கால நுகர்வுக்காகப் பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்கின்றனர் என்பதைப் பற்றி சாமுவேல்சன் (கூடுதலாக) கூறுகின்றார். எவ்வாறு சமுதாயம் பணத்தைப் பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ இத்தெரிவுகளை செய்கிறது என்று இவர் கூறுகின்றார். நிகர பொருளாதார நலம்
சாமுவேல்சன் நிகர பொருளாதார நலம் (Net Economic Welfare) என்ற புதிய கருத்தை உருவாக்கியுள்ளார். நாட்டு பொருளாதார நலத்தை
உருவாக்கும் நுகர்வு, முதலீட்டுப் பண்டங்கள், நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross National Product) ஒரு பகுதியாகும்.
நாம் செல்வந்தராக மாறும்போது வருமானத்தைவிட ஓய்வை அதிகம் விரும்புகிறோம், ஓய்விற்காக அதிக நேரத்தை ஒதுக்கும்போது மொத்த நாட்டு உற்பத்தி குறையும். ஆனால் நலம் உயரும். ஆகவே மொத்த நாட்டு உற்பத்தியை கணக்கிடும்போது ஓய்வில் கிடைக்கும் மன நிறைவையும் சேர்த்துக் கணக்கிட நிகர பொருளாதார நலம் (NEW) கிடைக்கும். )
பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளின் மதிப்பும் மொத்த நாட்டு உற்பத்தியை கணக்கிடும்பொழுது சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு சரியான நிகர-பொருளாதார நலம் கிடைக்கும்.
புதுக்கெய்னீசிய பொருளியல்
சாமுவேல்சனின்
தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக