புதன், 5 ஜூன், 2019
1-வேலையின்மை குறைவது /2-அமையச்செலவு பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு / 3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
உங்களுக்கு அவர்களே ஒரு உற்பத்தி சாத்திய வளையினை தந்து, வேலையின்மை குறைவதாக ஒரு வினாவை தொடுத்து,பின்னர் ஒரு பொருளினோ அல்லது இரு பொருளினதுமோ உற்பத்தி இயளவு குறைவதாகவோ கூடுவதாகவோ கூறி உங்களின் கவனத்தை திசை திருப்பும் முறையினை பாருங்கள்
உங்களுக்கு தெரியும் உற்பத்தி சாத்திய வளையி நகர்வதற்கான இரு பிரதான காரணங்கள்.இதானால் பொருளாதார வழர்ச்சி ஏற்படும்.
1-வளங்களின் அளவு அதிகரித்தல்
2-வளங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல்
மேற்குறிப்பிட்ட இந்த இரு பிரதான காரணங்களாலும் சாத்திய வளையியே நகரும் அதாவது இடப்புறமோ அல்லது வலப்புறமோ நகரும்.
மிக மிக அவதானம்,
1-வேலையின்மை குறைவது என்பது அமையச்செலவு
2-பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு என்பதும்
3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
இதனால் வளையி நகராது,வளையிக்கு உள்ளே ஏற்கனவே உள்ள புள்ளி மேல் நோக்கி நகரும்.
3 வினாவும் ஒன்றே.
இதிலேதாவது ஒரு வினாவினை தொடுத்து விட்டு,அடுத்த வினாவினை உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு தொடர்பாகவோ அல்லது சாதாரண வேலயின்மை அதிகரிப்பு தொடர்பாகவோ தொடுத்தால்.நீங்கள் குழம்புவீர்கள்,என்பது அவர்களுக்கு தெரியும்.
சில மாணவர்கள் வேலையின்மை குறைவு என்பதனை உள்நேக்கி மேலும் நகர்த்திவிடுவர்.அது அல்ல
மாறாக
உங்களுக்கு தெரியும் உற்பத்தி சாத்திய வளையி நகர்வதற்கான இரு பிரதான காரணங்கள்.இதானால் பொருளாதார வழர்ச்சி ஏற்படும்.
1-வளங்களின் அளவு அதிகரித்தல்
2-வளங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல்
உற்பத்திச் சாத்திய எல்லை வலதுபுறம் / வெளிப்புறம் நகர்வடைய பொறுப்பாகவுள்ள காரணிகள்/
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள்
1. 1-வளத்திரட்சி அதிகரித்தல்
a.
புதிய வளங்களின் பயன்பாடு/புதிய வளக்கண்டுபிடிப்பு
b.
புதிய முதலீட்டுப் பெருக்கம்
c.
சிறப்படைந்த தொழிற்படையின் குடிவருகை
d.
வெளிநாட்டு முதலீட்டு வருகை
e.
வெளிநாட்டு உதவி கிடைத்தல்
f.
கீழ்கட்டுமான விருத்திகள்/உட்கட்டுமான விருத்திகள்
2. 2- வள விளைதிறன் அதிகரித்தல்
- · நவீன நுட்பங்களின் வருகை/தொழில் நுட்ப முன்னேற்றம்
- · முகாமைத்துவ மேம்பாடு
- · மனித மூலதன விருத்தி
- · தொழிற்படை சிறப்புத் தேர்ச்சியடைதல்
- · உலகமயமாதல் விரிவடைதல்
1.
நாடொன்றின் உற்பத்தி இயலளவை நலிவடையச் செய்யும் காரணிகள் /உற்பத்திச் சாத்திய வளையியை இடப்புறம் நகரச் செய்யும் காரணிகள்
2.
வளத்திரட்சி குறைதல் / வளங்கள் அழிவடைதல்.
a.
இயற்கை அனர்த்தங்களால் வளங்கள் அழிவடைதல்.
b.
போரினால் வளங்கள் அழிவடைதல்.
c.
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல்/ வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படல்.
d.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல்.
e.
சிறப்படைந்த தொழிற்படையின் குடி அகல்வுகள்
f.
சனத்தொகை அழிவுகள்
3.
வளவிளைதிறன் திறன் குறைதல்.
a.
தொழில்நுட்ப தொகுதி அழிதல்.
b.
முகாமைத்துவத்தின் பின்னடைவு
c.
தொழிலாளர் வினைத் திறன் பின்னடைதல்
d.
தொழிற்படையின் சிறப்புத் தேர்ச்சியில் பின்னடைவு
மேற்குறிப்பிட்ட இந்த இரு பிரதான காரணங்களாலும் சாத்திய வளையியே நகரும் அதாவது இடப்புறமோ அல்லது வலப்புறமோ நகரும்.
மிக மிக அவதானம்,
1-வேலையின்மை குறைவது என்பது அமையச்செலவு
2-பூச்சிய நிலையில் உற்ப்பத்தி அதிகரிப்பு என்பதும்
3-குறை இயளளவு பயன்பாட்டிலும் உற்பத்தி அதிகரிப்பு
இதனால் வளையி நகராது,வளையிக்கு உள்ளே ஏற்கனவே உள்ள புள்ளி மேல் நோக்கி நகரும்.
3 வினாவும் ஒன்றே.
இதிலேதாவது ஒரு வினாவினை தொடுத்து விட்டு,அடுத்த வினாவினை உற்பத்தி சாத்திய வளையியின் நகர்வு தொடர்பாகவோ அல்லது சாதாரண வேலயின்மை அதிகரிப்பு தொடர்பாகவோ தொடுத்தால்.நீங்கள் குழம்புவீர்கள்,என்பது அவர்களுக்கு தெரியும்.
சில மாணவர்கள் வேலையின்மை குறைவு என்பதனை உள்நேக்கி மேலும் நகர்த்திவிடுவர்.அது அல்ல
உற்பத்தி சாத்திய எல்லை வரைபடத்தில் பின்வரும் நிலமைகளினை எவ்வாறு காட்டுவீர்கள்?
மாணவர்களுக்கு உற்பத்தி சாத்திய வளையியின் வரைவிலக்கணம் எப்படி விளங்கியிருக்கிறது என்பதனை அவர்கள் சோதனை செய்யவே இந்த வினா
அதாவது வளங்கள் முழுமையாகவும் ,திறமையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலமையினையே உற்பத்தி சாத்திய வளையியின் மேல் உள்ள ஒவ்வொரு புள்ளியும் காட்டும்.அவதானமாக இருங்கள்
மாணவர்களில் பலருக்கும் ஒரு பெரும் சந்தேகம் உண்டு
அதென்னப்பா நிறை தொழில் /நிறை தொழில் மட்டம்.??அது உற்பத்தி சாத்திய வளையியில் உள்ள ஒரு புள்ளி தானே ?/
அல்லது வழையிக்கு உள்ளேயும் அது அமையுமா??
அற்றன்ஷன்...
வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் அது நிறை தொழில்,
ஆனால் முழுமையாக பயன்படுத்தப்பட்ட வளங்கள் திறமையாக பயன் படுத்தப்பட்டால் மட்டுமே அது நிறை தொழில் மட்டம்.
1-நிறை தொழில் பொருளாதாரத்தில் வளங்களின் திறமையான பயன்பாடு?
இது நிறை தொழில் மட்டம்